196. முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லீரேல்
திட்டும்அற்று சுட்டும்அற்று முடியில்நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்தவீட தாகுமே.
விளக்கவுரை :
197.
அருக்கனோடு சோமனும்
அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கிஏறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கிஓர் எழுத்துமே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே.
198.
மூலவட்டம் மீதிலே
முளைத்தஅஞ்சு எழுத்தின்மேல்
கோலவட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்றநீர்
ஓலைவட்ட மன்றுளே நவின்றஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
199.
சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின்
வாசலுள்
முத்துசரம் எட்டுளே மூலாதார வறையிலே
அச்சமற்ற சவ்வுளே அரிஅரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே.
விளக்கவுரை :
200.
பூவும்நீரும் என்மனம்
பொருந்துகோயில் என்உளம்
ஆவியோடி லிங்கமாய் அகண்டம்எங்கும் ஆகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்குதூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்திசந்தி இல்லையே.
விளக்கவுரை :