சிவவாக்கியம் 76 - 80 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 76 - 80 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

76. அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்;
உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?

விளக்கவுரை :

அன்பு நிலை

77. இருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்;
உருவரங்கம் ஆகிநின்ற உண்மைஒன்றை ஓர்கிலீர்;
கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின்
திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே!

விளக்கவுரை :

[ads-post]

78. கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்திருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :

79. மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும்
கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல்
எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே.

விளக்கவுரை :

அறிவு நிலை

80. மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal