சிவவாக்கியம் 181 - 185 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 181 - 185 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

181. முத்தனாய் நினைந்தபோது முடிந்தஅண்டத் துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்துஆடல் ஆடினார்,
சித்தரான ஞானிகள், தில்லைஆடல் என்பீர்காள்!
அத்தன்ஆடல் உற்றபோது அடங்கல்ஆடல் உற்றவே.

விளக்கவுரை :

182. ஒன்றும்ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும்இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல்நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம் உம்முளே அரிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

183. நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமானது ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே.

விளக்கவுரை :

184. வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டசமீ பத்திலே சங்குசக் கரங்களாய்
விட்டதுஅச்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசிவன் விட்டவாறது எங்ஙனே?

விளக்கவுரை :

185. கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா?
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal