156.
நாடிநாடி நம்முளே நயந்துகாண
வல்லீரேல்
ஓடிஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பிரே!
விளக்கவுரை :
157.
பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட
மூடரே?
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்.
பிணங்கும்ஓர் இருவினைப் பிணக்கறுக்க வல்லீரேல்!
பிணங்கிலாத பெரியஇன்பம் பெற்றிருக்க லாகுமே!
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
158.
மீன்இறைச்சி தின்றதில்லை
அன்றும்இன்றும் வேதியர்?
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
விளக்கவுரை :
159.
ஆட்டிறைச்சி தின்றதில்லை
அன்றும்இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலோ?
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது?
விளக்கவுரை :
160.
அக்கிடீர்
அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது,
மைக்கிடீர் பிறந்துஇறந்து மாண்டுமாண்டு போவது,
மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே.
விளக்கவுரை :