266.
ஏகமுத்தி மூன்றுமுத்தி
நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய்
நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி தேவனே.
விளக்கவுரை :
267.
மூன்றுமுப்பது ஆறினோடு
மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த்
தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றெனாவின் உள்புகுந்த தென்கோலோ நம்ஈசனே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
268.
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
அல்லவற்றுள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே.
விளக்கவுரை :
269.
ஆறும்ஆறும் ஆறுமாய்
ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும்ஓசை யாய்அமர்ந்த மாயமாம் மாயனே.
விளக்கவுரை :
270.
எட்டும்எட்டும் எட்டுமாய்
ஓர்ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்றஆதி தேவனே
எட்டுமாய பாதமோடு இறைஞ்சி நின்றவண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே.
விளக்கவுரை :