சிவவாக்கியம் 406 - 410 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 406 - 410 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

406. வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்,
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே.

விளக்கவுரை :

407. அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

408. சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல் பலகையாய்
செக்கிலாடும் எண்ணெய்போலச் சிங்குவாயு தேயுவும்
உக்கிலே ஒளிக்கலந்து உகங்களும் கலக்கமாய்ப்
புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே?

விளக்கவுரை :

409. வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்
அருள்கொள்சீவ ராருடம்பை உண்மையகத் தேர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே.

விளக்கவுரை :

410. நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ?
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலம்உண்ட கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச்
சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal