சிவவாக்கியம் 496 - 500 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 496 - 500 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

496. நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன்
வானில்அல்ல சோதிஅல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும்நீயும் ஒத்தபோது நாடிகாண லாகுமோ?
தானதான தந்தான தாதனான தானனா.

விளக்கவுரை :

497. நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான்
நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்ற நாடிநின்று நாமம்சொல்ல வேண்டுமே.

விளக்கவுரை :

[ads-post]

498. பேய்கள்கூடிப் பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன்வாழ்க்கை ஏதடா?
தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால்
நோய்கள்பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே.

விளக்கவுரை :

499. உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம்கெட்ட தடியனாகும் மனமேகேள்;
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன்பாதம் உண்மையே.

விளக்கவுரை :

500. பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பதில்லை எனமகிழ்ந்து எங்கள்உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ?
நிறப்பும்பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal