சிவவாக்கியம் 341 - 345 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 341 - 345 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

341. மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில்
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்,
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே.

விளக்கவுரை :

342. உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி கூவும்கீயும் ஆனதே.

விளக்கவுரை :

[ads-post]

343. கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போலப் பொருந்திநின்ற பூரணம்
ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே.

விளக்கவுரை :

344. ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை
காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.

விளக்கவுரை :

345. நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான கீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal