சிவவாக்கியம் 271 - 275 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 271 - 275 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

271. பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய்
பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையால்
பத்துமாய கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட் கலாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே.

விளக்கவுரை :

272. வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பாவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையாய் மறக்கலாது அமரர்ஆகல் ஆகுமே.

விளக்கவுரை :

[ads-post]

273. எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியும் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

274. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே.

விளக்கவுரை :

275. பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே!

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal