366.
அருளிருந்த வெளியிலே
அருக்கன்நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஊவும்ஈயும் ஆனதே.
விளக்கவுரை :
367.
ஆனதோர் எழுத்திலே
அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே;
தானும்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில்
ஏனலோடு மாறுபோல் இருந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
368.
ஆறுகொண்ட வாரியும்
அமைத்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூரமும்
வீறுகொண்ட மோனமும் விளங்கும் உட்கமலமும்
மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
369.
வாயில்கண்ட கோணமில்
வயங்கும்ஐவர் வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூர்அங்குச் சென்றதும்
பாயும்என்று சென்றதும் பறந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
370.
பறந்ததே துறந்தபோது
பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே
பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமற் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.
விளக்கவுரை :