106.
பரம்உனக்கு எனக்குவேறு
பயம்இலை பராபரா!
கரம்எடுத்து நிற்றலும் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி அமுதளித்த சீருலாவு நாதனே;
உரம்எனக்கு நீ அளித்த ஓம்நமசி வாயவே!
விளக்கவுரை :
107.
பச்சைமண் பதுப்பிலே
பழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்;
பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும்
பிச்சர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
108.
ஒளியதான காசிமீது
வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.
விளக்கவுரை :
109.
விழியினோடு புனல்விளைந்த
வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவுநின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள்மூல வித்தையும்
தெளியும் வல்லஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே.
விளக்கவுரை :
110.
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய்
உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!
விளக்கவுரை :