121.
நெட்டெழுத்து வட்டமே
நிறைந்தவல்லி யோனியும்,
நெட்டெழுத்து வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே!
விளக்கவுரை :
122.
விண்ணிலுள்ள தேவர்கள்
அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்துவாழ்வ துண்மையே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
123.
விண்கடந்து நின்றசோதி
மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே.
விளக்கவுரை :
124.
மூலமான மூச்சதில் மூச்சறிந்து
விட்டபின்
நாளுநாளு முன்னிலொரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே!
விளக்கவுரை :
125.
மின்எழுந்து மின்பரந்து
மின்ஒடுங்கு மாறுபோல்
என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுள்ளே அடங்குமே,
கண்ணுள்நின்ற கண்ணில்நேர் மைகண்அறி விலாமையால்
என்னுள்நின்ற வென்னையன்றி யான்அறிந்ததில்லையே!
விளக்கவுரை :