சிவவாக்கியம் 411 - 415 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 411 - 415 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

411. சுற்றும்என்று சொல்வதும் சுருதிமுடிவில் வைத்திடீர்
அத்தம்நித்தம் ஆடியே அர்ந்திருந்தது எவ்விடம்?
பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில்ஒன்று பாழது,
பித்தரே, இதைக்கருதி பேசலாவது எங்ஙனே?

விளக்கவுரை :

412. எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம்அண்மி யானைபோலத் திரிமலங்கள் அற்றவே.

விளக்கவுரை :

[ads-post]

413. அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்ததீபம் இட்டதில் ப்ரவாதபூசை ஏய்த்தியே
நற்றவம் புரிந்தும்ஏக நாதர்பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே.

விளக்கவுரை :

414. பார்த்துநின்றது அம்பலம் பரமன்ஆடும் அம்பலம்
கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம்
சீற்றமாவது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

415. சென்றுசென்று இடந்தொறும் சிறந்தசெம்பொன் அம்பலம்
அன்றும்இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம்
என்றும்என்றும் இருப்பதோர் இறுதியான அம்பலம்
ஒன்றிஒன்றி நின்றதுள் ஒனிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal