256. பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே
ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில்
ஆய்ந்தநூலில் தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே.
விளக்கவுரை :
257.
புண்டரீக மத்தியில்
உதித்தெழந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
258.
அம்பலங்கள் சந்தியில்
ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பதுஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாதனே
உம்பருக்கு உண்மையாய் நின்றஉண்மை உண்மையே.
விளக்கவுரை :
259.
அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த
மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன்
கண்ணனாக வந்ததன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்?
விளக்கவுரை :
260.
உள்ளதோ புறம்பதோ
உயிர்ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்?
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம்.
விளக்கவுரை :