சிவவாக்கியம் 206 - 210 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 206 - 210 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

206. ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.

விளக்கவுரை :

207. அங்கலிங்க பீடமும் அசவைமூன்று எழுத்தினும்
சங்குசக் கரத்திலும் சகல வானத்திலும்
பங்குகொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயம்அல்ல தில்லையே.

விளக்கவுரை :

[ads-post]

208. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்;
அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே.

விளக்கவுரை :

209. ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ, எங்கும்ஆகி நின்றதோ?
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே.

விளக்கவுரை :

210. அக்கரம் அனாதியோ, ஆத்துமா அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ?
மிக்கவந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal