சிவவாக்கியம் 176 - 180 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 176 - 180 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

176. உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்?
உவமையாகி அண்டத்தில் உருவிநின்றது எவ்விடம்?
தவமதான பரமனார் தரித்துநின்றது எவ்விடம்?
தற்பரத்தில் சலம்பிறந்து தங்கிநின்றது எவ்விடம்?

விளக்கவுரை :

177. ககமாக எருதுமூன்று கன்றைஈன்றது எவ்விடம்?
சொல்லுகீழு லோகம்ஏழும் நின்றவாறது எவ்விடம்?
அவனும்அவளும் ஆடலால் அருஞ்சிவன் பிறந்ததே,
அவள்தான் மேருவும் அவமைதானது எவ்விடம்?

விளக்கவுரை :

[ads-post]

178. உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

179. திரும்பியாடு வாசல்எட்டு திறம்உரைத்த வாசல்எட்டு,
மருங்கிலாத கோலம்எட்டு வன்னியாடு வாசல்எட்டு,
துரும்பிலாத கோலம்எட்டு சுற்றிவந்த மருளரே!
அரும்பிலாத பூவும்உண்டு ஐயன்ஆணை உண்மையே!

விளக்கவுரை :

180. தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறைதிறந்து தித்திஒன்று ஒத்ததே
வானிருந்து மதியமூன்று தண்டலம் புகுந்தபின்
ஊனிருந்து அளவுகொண்ட யோகிநல்ல யோகியே!

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal