111.
அல்லல்வாசல் ஒன்பதும்
அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.
விளக்கவுரை :
112.
ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக
ரூபமாய்
சாதிபேத மாய்எழுந்து சர்வசீவன் ஆனபின்
ஆதியோடு இருந்துமீண்டு எழுந்துசென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
113.
மலர்ந்ததாது மூலம்மாய்
இவ்வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந்து அருத்ததும் விடுத்ததும்
புலன்கள்ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்றமாயம் என்னமாயம் ஈசனே.
விளக்கவுரை :
114.
பாரடங்க உள்ளதும்
பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன்தெரிந்து ஞானியே!
விளக்கவுரை :
115.
மண்கிடார மேசுமந்து
மலையுள்ஏறி மறுகுறீர்,
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்,
தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே?
விளக்கவுரை :