சிவவாக்கியம் 211 - 215 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 211 - 215 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

211. ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம்
அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே.

விளக்கவுரை :

212. அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது?
மெள்ளவே முணமுணவென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ளவேடம் இட்டதேது கண்ணைமூடி விட்டதேது?
மெள்ளவே குருக்களே, விளம்பிடீர் விளம்பிடீர்.

விளக்கவுரை :

[ads-post]

213. அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;
உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே.

விளக்கவுரை :

214. அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே,
அழுக்கிருந்தது எவ்விடம், அழகில்லாதது எவ்விடம்.
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல்
அழுக்கிலாதது சோதியோடு அணுகிவாழ லாகுமே.

விளக்கவுரை :

215. அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய்
மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதுஏது; சாவதுஏது; தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பதுஏது? நிற்பதுஏது; நீர்நினைந்து பாருமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal