சிவவாக்கியம் 286 - 290 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 286 - 290 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

286. அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விரலைஒன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே.

விளக்கவுரை :

287. மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது *முடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆலயோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ?

விளக்கவுரை :

[ads-post]

288. முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே.

விளக்கவுரை :

289. வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்,
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே.

விளக்கவுரை :

290. நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது.
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal