சிவவாக்கியம் 171 - 175 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 171 - 175 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

171. ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனைவந்து பாலிலே குதித்ததும்
பணிக்கன்வந்து பார்த்ததும் பாரம்இல்லை என்றதும்
இழைஅறுந்து போனதும் என்னமாயம் ஈசனே?

விளக்கவுரை :

172. சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயுவாறு என்னும்வட்ட மேவியே.
உதிரதான வரைகள்எட்டும் எண்ணும்என் சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே.

விளக்கவுரை :

[ads-post]

173. நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே
கோலிஅஞ் செழுத்துளே குருஇருந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே.

விளக்கவுரை :

174. கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய்ப் பிறந்ததும் சிவாயம்அஞ் செழுத்துமே
ஈசனார் அருந்திட அனேகனேக மந்திரம்
ஆசயம் நிறைந்துநின்ற ஐம்பத்தோர் எழுத்துமே.

விளக்கவுரை :

175. அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்குதா மரையினும் பொருந்துவார் அகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்தஅஞ்சு எழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal