சிவவாக்கியம் 481 - 485 of 525 பாடல்கள்


சிவவாக்கியம் 481 - 485 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

481. ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்ப பூசைஎன்ன பூசைஎன்ன பூசையோ?

விளக்கவுரை :

482. என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமே
உனதுநாமம் எனதுநாவில் உதவிசெய்வீர் ஈசனே.

விளக்கவுரை :

[ads-post]

483. எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
வல்லபூர ணப்பிரகாசர் ஏகதபோகம் ஆகியே
நல்லஇன்பம் மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம்உண்டு நான்அழிந்து நின்றநாள்.

விளக்கவுரை :

484. ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லீரேல்
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
கானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே.

விளக்கவுரை :

485. நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்?
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ?
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே?

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal