86.
பருகிஓடி உம்முளே
பறந்துவந்த வெளிதனை
நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே.
உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே
கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.
விளக்கவுரை :
87.
சோதியாகி ஆகிநின்ற
சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா,
வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய்
ஆதிநாதன் தன் நாதன்என்று அனந்தகாலம் உள்ளதே
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
88.
இறைவனால் எடுத்தமாடத்
தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்தகாயம் அஞ்சினால் அமைந்ததே.
கருவிநாதம் உண்டுபோய்க் கழன்றவாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே.
விளக்கவுரை :
89.
நெஞ்சிலே இருந்திருந்து
நெருக்கிஓடும் வாயுவை
அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லீரேல்
அன்பர்கோயில் காணலாம் அகலும்எண் திசைக்குளே
தும்பிஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!
விளக்கவுரை :
90.
தில்லையை வணங்கிநின்ற
தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.
விளக்கவுரை :