சிவவாக்கியம் 166 - 170 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 166 - 170 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

166. நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம்
ஆரைஉன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்?
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம்!

விளக்கவுரை :

167. நெற்றியில் தயங்குகின்ற நீலமாம் விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியைப்
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்தில் இருந்தபேர்கள் அவர்எனக்கு நாதரே.

விளக்கவுரை :

[ads-post]

168. கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது எவ்விடம்?
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்றது எவ்விடம்?
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது எவ்விடம்?
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம்என்று கூறுவீர்.

விளக்கவுரை :

169. கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது தேயுவில்,
உருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில்
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.

விளக்கவுரை :

170. தாதரான தாதரும் தலத்தில்உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal