421.
அம்மையப்பன் அப்பன்நீர்
அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான் பாசமே
அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை ஆனபின்
அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை இல்லையே.
விளக்கவுரை :
422.
முந்தஓர் எழுத்துளே
முளைத்தெழந்த செஞ்சுடர்
அந்தஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்தஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்தஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
423.
கூட்டம்இட்டு நீங்களும்
கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே?
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மைஆணை உண்மையே.
விளக்கவுரை :
424.
காக்கை மூக்கை ஆமையார்
எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆனதே.
விளக்கவுரை :
425.
ஓசைஉள்ள கல்லைநீர்
உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?
விளக்கவுரை :