சிவவாக்கியம் 261 - 265 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 261 - 265 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

261. ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேரவெந்து போயிருந்த தேகம்ஏது செப்புமே?

விளக்கவுரை :

262. என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்?
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னைஅன்றி யாதுமொன்று மில்லையே.

விளக்கவுரை :

[ads-post]

263. விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுள்நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்திருக் கையால்
கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணிறி விலாமையால்
என்னுள்நின்ற என்னையும் யானறிந்தது இல்லையே.

விளக்கவுரை :

264. அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே.

விளக்கவுரை :

265. மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல்
வீட்டுவீழில் தாகபோக விண்ணில்மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal