பத்திரகிரியார் பாடல்கள் 86 - 90 of 231 பாடல்கள்

86. அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

87. கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

88. ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்?

விளக்கவுரை :

89. கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து
சுட்டுவிடுமுன் என்னைச் சுட்டிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

90. தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்
நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 81 - 85 of 231 பாடல்கள்

81. நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள்
கிட்டவழி காட்டிக் கிருபை செய்வது எக்காலம்?

விளக்கவுரை :

82. நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி
நானே வெளிப்படுத்தித் தருவன் என்பதும் எக்காலம்?

விளக்கவுரை :

83. அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்?

விளக்கவுரை :

84. ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

85. இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு
சினமாண்டு போக அருள் தேர்ந்திருப்பது எக்காலம் ?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 76 - 80 of 231 பாடல்கள்

76. அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

77. அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம்?

விளக்கவுரை :

78. பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

79. தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்?
ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்?

விளக்கவுரை :

80. புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 71 - 75 of 231 பாடல்கள்

71. வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்?

விளக்கவுரை :

72. உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம்?

விளக்கவுரை :

73. பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி
வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

74. கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதி எல்லாம்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

75. கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.