பத்திரகிரியார் பாடல்கள் 76 - 80 of 231
பாடல்கள்
76. அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது
எக்காலம்?
விளக்கவுரை :
77. அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிறிவுபட இருத்திப் பெலப்படுவது
எக்காலம்?
விளக்கவுரை :
78. பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவது
எக்காலம்?
விளக்கவுரை :
79. தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்?
ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்?
விளக்கவுரை :
80. புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்றறிவது
எக்காலம்?
விளக்கவுரை :