பத்திரகிரியார் பாடல்கள் 141 - 145 of 231 பாடல்கள்

141. பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

142. நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

143. பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம்?

விளக்கவுரை :

144. பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்?

விளக்கவுரை :

145. காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே
ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 136 - 140 of 231 பாடல்கள்

136. மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல
பித்தடுத்து நின் அருளைப் பெற்றிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

137. சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்?

விளக்கவுரை :

138. என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின்
தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம்?

விளக்கவுரை :

139. உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

140. வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 131 - 135 of 231 பாடல்கள்

131. பாகம் நடு மாறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம்?

விளக்கவுரை :

132. ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

133. காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

134. ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்?

விளக்கவுரை :

135. குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 126 - 130 of 231 பாடல்கள்

126. சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்?

விளக்கவுரை :

127. ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

128. கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்?

விளக்கவுரை :

129. தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

130. தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.