பத்திரகிரியார் பாடல்கள் 151 - 155 of 231 பாடல்கள்

151. பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

152. ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

153. பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே
அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம்?

விளக்கவுரை :

154. ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம்?

விளக்கவுரை :

155. சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 146 - 150 of 231 பாடல்கள்

146. உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்?

விளக்கவுரை :

147. வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

148. பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம்?

விளக்கவுரை :

149. அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம்?

விளக்கவுரை :

150. ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே
எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 141 - 145 of 231 பாடல்கள்

141. பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

142. நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

143. பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம்?

விளக்கவுரை :

144. பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்?

விளக்கவுரை :

145. காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே
ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 136 - 140 of 231 பாடல்கள்

136. மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல
பித்தடுத்து நின் அருளைப் பெற்றிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

137. சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்?

விளக்கவுரை :

138. என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின்
தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம்?

விளக்கவுரை :

139. உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

140. வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.