பத்திரகிரியார் பாடல்கள் 186 - 190 of 231 பாடல்கள்

186. எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க்
கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

187. உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம்
கண்டதுவும் நீயெனவேகண்டு கொள்வது எக்காலம்?

விளக்கவுரை :

188. ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம்?

விளக்கவுரை :

189. சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற இடம்
சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

190. போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும்
தாக்கும் ஒரு பொருளைச் சந்திப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 181 - 185 of 231 பாடல்கள்

181. ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை
பாவிஅறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

182. ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை
நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம்?

விளக்கவுரை :

183. சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்
போகா உடல்அகன்று போவதென்பது எக்காலம்?

விளக்கவுரை :

184. நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்ட வெளியில்விரவி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

185. வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ்
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 176 - 180 of 231 பாடல்கள்

176. இருளை ஒளி விழுங்கி ஏகஉருக் கொண்டாற்போல்
அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

177. மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

178. கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

179. பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை
காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம்?

விளக்கவுரை :

180. செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 171 - 175 of 231 பாடல்கள்

171. சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியந்தோற்றத்து அருள் பெறுவது எக்காலம்?

விளக்கவுரை :

172. இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்?

விளக்கவுரை :

173. கருக்கொண்ட முட்டைதனைக் கடல் ஆமைதான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல்உனை அடைவது எக்காலம்?

விளக்கவுரை :

174. வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவது எக்காலம்?

விளக்கவுரை :

175. கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.