பத்திரகிரியார் பாடல்கள் 176 - 180 of 231 பாடல்கள்


பத்திரகிரியார் பாடல்கள் 176 - 180 of 231 பாடல்கள்

176. இருளை ஒளி விழுங்கி ஏகஉருக் கொண்டாற்போல்
அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

177. மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

178. கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

179. பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை
காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம்?

விளக்கவுரை :

180. செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்?

விளக்கவுரை :

பத்திரகிரியார், பத்திரகிரியார் பாடல்கள், pattrakiriyar, pattrakiriyar paadalkal, siththarkal