போகர் சப்தகாண்டம் 156 - 160 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
156. மவுனமாம் மூலத்தில் முந்திமுந்தி மருவினால் பளிச்சென்று லிகிதங்காணும்
நிவுனமாலிங்கமது நந்தியாக நேராகயெட்டிதழும் விரிந்துகாணும்
உவுனமா மகத்தைவிட்டுச் சுழிமுனையினூடே ஓகோகோ அநாகதத்தில் மவுனமெட்டு
சவுனமா மசைந்துநித்த மவுனத்தாலே சிரசுசடை யசைந்தாட நடனந்தானே

விளக்கவுரை :


157. காணப்பா மேலேறி யக்கினியினுள்ளே கருத்தாகி மவுனத்தை தாக்கினாக்கால்
நீணப்பா சதாசிவன்தான் நிர்த்தஞ்செய்வார் நிலையாக சிவகாமி யிருந்துபார்ப்பாள்
ஆணப்பா யவனிடத்தில் கவர்ந்து நித்தம் அனுகினாலம்பலத்தி னடையலாகும்
மூணப்பா வதைவிட்டு அறிவின்மூலம் முதிர்ந்தேற வாசியுடமுறையைக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

158. முறைமையாய் நடுவில் மவுனமூன்றி முதிர்ந்துமனமேறவிட்டுத் திறமாய்நில்லு
திறமையாய் அறியவென்றால் எழில்சேரமைந்து ஏறுவதும் தவறுவதும் மனதுக்குள்பாரு
அருமையாய் அறிவினுடமூலங் கண்டால் அசடில்லா கற்பூரதேகமாச்சு
செருமையாய் ஆலயத்துள் சிவன்தான்வந்து திரட்டியன்னங்கொடுக்கையிலே யுண்ணலாமே

விளக்கவுரை :


159. உண்ணலாமென்று நித்த மூலத்துள்ளே உறுதியாய் ஒவ்வொன்றாய் உரைத்துக்காணும்
எண்ணலா மினத்தோடோ வரிசையோடேயே மாறலில்லாமல் எத்தியாடு
கண்ணலாம் அட்சரத்தில் கருத்தைவைத்துப்பாருச் சுருதிநின்ற மந்திரத்தைச் சேர்த்துவுண்ணு
பொன்னலாம் புலன்தன்னை யவரவர்களிருக்கும் பேரானவீட்டில்வைத்துப் பூட்டிப்போடே

விளக்கவுரை :


160. பூட்டிட்டு நாலாக வெளியினுள்ளே புகழ்நின்ற ஜோதியைப்பார் பொருளே தோன்றும்
கூட்டிட்டு ஒவ்வொன்றாய்க் கடிந்துகூடும் கொள்கியதோர் மூன்றாந்தா னறைதானுள்ளே
மாட்டிட்ட மேற்கண்ணின் மணித்தாயப்பா மருவிநின்ற கொலுக்காண கண்ணுண்டோசொல்
மீட்டிடும் மேலான புத்திதானுஞ்சென்றால் வேதாந்த முடிவான வெளியுமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 151 - 155 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
151. சஞ்சலத்தினைப் போக்கித் தயவாகப்பூரணந்தான் காட்டி நெஞ்சலத்தில்
சித்தரெல்லாம் பணியக்காட்டி தேசிமராமென்குருவும் மண்டலத்தெய்தில்
கஞ்சலித்து கண்களித்தே உன்கருணைக்கூர்ந்தேன் கருணைதந்தா
ரென்றுரைத்து கடாட்சித்தாரே

விளக்கவுரை :


152. ஆரேயம்புலனறுத்தால் மனமொன்றாச்சு அரிகமனவாய்வுவேனப் பூசித்தோங்கும்
போமென்ற வாயுமேல் மனதுயேறிபொரிகடந்து நெறிகடந்து போக்குந்தாண்டி
கூரென்ற வாரொடு குளப்பதமுந்தாண்டி கொடிதான முப்பாழின் போக்குந்தாண்டி
மாமென்ற மணித்தாயை சரணம்பணணி வைத்துப்பார் நாலுக்குள் மருவிப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

மனப்பெருமை மௌனயோகம்

153. மருவியே முந்திமுந்தி மூலம்நீதான் வாசிகொண்டு பாய்ச்சியதில் மாட்டிப்பாரு
உருவியே குறியின்மேல் கொண்டாயானால் உற்பான நாலைவிட்டால் எங்குமில்லை
அருவியே முன்பின்னும் கீழுமேலும் அழவென்னதழலென்ன மதிதானென்ன 
கருவியே கனங்கொள்ளாக் காட்சியாகும் கனங்கொள்ளாப் போதத்தைக் கண்டிடாயே

விளக்கவுரை :


154. கண்டிட்ட மனத்தாலே தவமுமாச்சு கவர்ந்ததுவுமுயிரதுவும் மனமேயாச்சு
மண்டிட்ட வாயுமேல் மனமுமாச்சு மகத்தான சஞ்சலத்தால் மனம்பேயாச்சு
அண்டிட்ட தீபம்போல் மனமேசென்று அண்டத்தில் சேர்ந்ததென்றால் அதுவேபோதம்
மண்டிட்ட மனம்விட்டால் ஞானம்போச்சு வாசியைத்தான் நழுவவிட்டால் யோகம்போச்சே

விளக்கவுரை :


155. யோகத்தை விடுகாதே மவுனமார்க்கம் உற்பனமாய்ப்புத்தியள்ளானென்றுச் சொல்லிக்
காகத்தை காலாங்கி ஐயனார்தாமும் கடாட்சித்துமுன்னேதான் பிராணயாமம்
மோகத்தை முதிர்ந்தபின்பு மொழிந்தசொற்கேளு முந்தினதோர் மூலத்திலகாரமீசன்
காகத்தை உகாரமது சத்தியாக்க தனித்திரண்டுங்கூடுவது மவுனமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 146 - 150 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
146. நாமென்றே போகிறது வருகிறது ரண்டாம் நலமான ஓரெழுத்து எங்கே என்றால்
கோமென்ற குருபதத்தில் ஐக்கியமாகி கூடியேமருவிநின்று அரியென்றாகி
வாமென்ற வாசியினால் சிகாரமாகி வாசியோடொன்றியே சிங்கென்றாச்சு
தேமென்ற ஓரெழுத்தால் வாசியாச்சு சகனாச்சு சடமாச்சு அண்டமாச்சே

விளக்கவுரை :


147. ஆச்சென்ற ஓரெழுத்தால் கோபமாச்சு அரகறா உற்பனமும் ஒடுங்கின மூலமாச்சு
ஓச்சென்ற எழுத்தாலே ஒளியுமாச்சு உள்ளடங்கிச் சோதியைப்போல் நந்திநந்தி 
தேச்சென்ற வெழுத்தடங்கில் ஜோதிகாணும் தேகமுமே விளக்கொளியாஞ் சிந்தையில்லை
நாச்சென்ற சந்திரனுஞ் சூரியனும் ஒன்றாய் தயங்காதே சுழிமுனையில் பேணிகூடே

விளக்கவுரை :

[ads-post]

148. கூடுவது முப்பாழும் மூன்றுவீதி குறிப்பாக முனையுமணிகூடிச்சேர்க்கும்
நாடவே நாலுக்குளடங்கும்பாரு நலமாக ஏணிபழுவாகக்காணும் 
ஏடவே தளத்தோடு எழுத்துபாரு ஏறினால் முப்பாழும் கடந்துபோகும்
பாடவே பராபரத்தில் மனோன்மணித்தாயும் பரிவான அமிர்தமொடு பாலிப்பாளே

விளக்கவுரை :


149. பாலிப்பாலது கடந்தால் நிராதாரந்தான் பார்த்துமே தெளிந்த பின்பு  
பரத்தேயேகில் போலிப்பாள் தெளிவான போதம்போதம் போக்கோடே என்குருவும் அதற்குள்ளசென்றார்
ஏறிப்பாழிது கடந்தேபோனேன் இளைப்பாறி யிதுகடந்து அந்தரத்திலேறில்
ஜொலிப்பான சிலம்பொலியில் புக்கினேன்யான் சுகமெல்லாம் காலாங்கியைப் பார்த்தாச்சே

விளக்கவுரை :


150. ஐயரென்ற காலாங்கிநாதர் தானறியாத சிறியோர்க்கு அறிவுதந்தார்
உயிரென்ற உடல்பொருளாவியுந்தான் மூன்றாம் உலகத்தார் கொண்டவர்க்குப் பலந்தானென்றேன்
செய்யமென்ற சிலம்பொலிக்குள் அவரும்வந்தார் சிரசுவைத்து அவர்பதத்தில் சரணஞ்செய்தேன்
ஐயரென்று எனையாண்டு ஞானங்காட்டி யெளிமையாஞ் சஞ்சலத்தை யோட்டினாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 141 - 145 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
141. ஏதென்று பிறக்காமல் அதற்குள்ளேநின்று இன்னமொருவரை யேறியிதுவே என்பான்
வாதென்று அதற்குள்ளே மயங்கியேங்கி மற்றுமொருவரையேறி யிதுதானென்பான்
தீதென்று மூன்றுவரை திறந்துயேறி சிறந்துநின்று உம்மனையிதுதானென்பான்
யாதென்று ரவிகோடி வன்னிகோடி பரிவானமதிகோடி பரிந்துபாரே

விளக்கவுரை :


142. பரிந்துபார் முதற்பாழில் பூதபூதம் புரியாதவன்தான் வாதியாவான்
எரிந்துபாரண்டன்பாழ்தேதிட்டாக்கா லெட்டெட்டு மறுபத்துநாலாஞ் சித்தன்
முரிந்துபார் மூணாம்பாழ் புக்கினாக்கால் மூச்சான வாதுபது பிரந்ததானம்
கரிந்துபார் நால்பரிஞ்ச போகுவிடங்கண்டால் எமனடுங்கிப்போவான் இடம்காட்டிடாமே

விளக்கவுரை :

[ads-post]

143. நாட்டியே நிராதாரம் தன்னில்சொக்கி நலமாகக் குழைந்துள்ளே புகுந்தாயானால்
நாடியே தானேற காமம்போச்சு சாஸ்திரத்தாலாய்ந்த பொருளும்போச்சு
சூட்டியேசுழுத்தியைப்போல் உறக்கமாச்சு தூங்குமாம் ஆகுமோ ஒன்றுங்காணார்
தாட்டியே சடம்போன சழுத்தியினில் புகுந்தால் தனித்தசிவன் போலாவாய்நீயுங்காணே

விளக்கவுரை :


144. காணவே பாடினதோர் கூத்தைப்பார்த்து கருத்துரைத்து பின்புதான்வாதம்பாரு
பானவே பாதரவா நோக்கிப்பாரு பாதந்தல்லாடியதோர் கூத்துங்காணும்
கானவே வாசியுட நட்பைக்கண்டால் நடனமாய் கூத்ததுவும் கண்முன் காணும்
தானவே நடனத்தின் கூத்துகண்டால் தடித்ததோர்சாவும் பொய்யாகிப்போமே

விளக்கவுரை :


145. போமென்று சொன்ன ஆறாதாரத்தில் போக்கான களத்தில் நிற்கும் அட்சரந்தான்
ஆமென்று சேர ஐம்பது அட்சரமேயாச்சு அப்பனே ஒன்றெங்கே காணோங்காணோம்
ஒன்றென்று ஒன்று உண்டாக்கால் அதுதான் மாயம் மாயம் என்றுணர
மாமென்று ஆசானை யடுத்துக்கேளு அதுவறிந்து சொன்னாக்கால் குருவேயாகும்

விளக்கவுரை :


Powered by Blogger.