போகர் சப்தகாண்டம் 146 - 150 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 146 - 150 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
146. நாமென்றே போகிறது வருகிறது ரண்டாம் நலமான ஓரெழுத்து எங்கே என்றால்
கோமென்ற குருபதத்தில் ஐக்கியமாகி கூடியேமருவிநின்று அரியென்றாகி
வாமென்ற வாசியினால் சிகாரமாகி வாசியோடொன்றியே சிங்கென்றாச்சு
தேமென்ற ஓரெழுத்தால் வாசியாச்சு சகனாச்சு சடமாச்சு அண்டமாச்சே

விளக்கவுரை :


147. ஆச்சென்ற ஓரெழுத்தால் கோபமாச்சு அரகறா உற்பனமும் ஒடுங்கின மூலமாச்சு
ஓச்சென்ற எழுத்தாலே ஒளியுமாச்சு உள்ளடங்கிச் சோதியைப்போல் நந்திநந்தி 
தேச்சென்ற வெழுத்தடங்கில் ஜோதிகாணும் தேகமுமே விளக்கொளியாஞ் சிந்தையில்லை
நாச்சென்ற சந்திரனுஞ் சூரியனும் ஒன்றாய் தயங்காதே சுழிமுனையில் பேணிகூடே

விளக்கவுரை :

[ads-post]

148. கூடுவது முப்பாழும் மூன்றுவீதி குறிப்பாக முனையுமணிகூடிச்சேர்க்கும்
நாடவே நாலுக்குளடங்கும்பாரு நலமாக ஏணிபழுவாகக்காணும் 
ஏடவே தளத்தோடு எழுத்துபாரு ஏறினால் முப்பாழும் கடந்துபோகும்
பாடவே பராபரத்தில் மனோன்மணித்தாயும் பரிவான அமிர்தமொடு பாலிப்பாளே

விளக்கவுரை :


149. பாலிப்பாலது கடந்தால் நிராதாரந்தான் பார்த்துமே தெளிந்த பின்பு  
பரத்தேயேகில் போலிப்பாள் தெளிவான போதம்போதம் போக்கோடே என்குருவும் அதற்குள்ளசென்றார்
ஏறிப்பாழிது கடந்தேபோனேன் இளைப்பாறி யிதுகடந்து அந்தரத்திலேறில்
ஜொலிப்பான சிலம்பொலியில் புக்கினேன்யான் சுகமெல்லாம் காலாங்கியைப் பார்த்தாச்சே

விளக்கவுரை :


150. ஐயரென்ற காலாங்கிநாதர் தானறியாத சிறியோர்க்கு அறிவுதந்தார்
உயிரென்ற உடல்பொருளாவியுந்தான் மூன்றாம் உலகத்தார் கொண்டவர்க்குப் பலந்தானென்றேன்
செய்யமென்ற சிலம்பொலிக்குள் அவரும்வந்தார் சிரசுவைத்து அவர்பதத்தில் சரணஞ்செய்தேன்
ஐயரென்று எனையாண்டு ஞானங்காட்டி யெளிமையாஞ் சஞ்சலத்தை யோட்டினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar