போகர் சப்தகாண்டம் 151 - 155 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 151 - 155 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
151. சஞ்சலத்தினைப் போக்கித் தயவாகப்பூரணந்தான் காட்டி நெஞ்சலத்தில்
சித்தரெல்லாம் பணியக்காட்டி தேசிமராமென்குருவும் மண்டலத்தெய்தில்
கஞ்சலித்து கண்களித்தே உன்கருணைக்கூர்ந்தேன் கருணைதந்தா
ரென்றுரைத்து கடாட்சித்தாரே

விளக்கவுரை :


152. ஆரேயம்புலனறுத்தால் மனமொன்றாச்சு அரிகமனவாய்வுவேனப் பூசித்தோங்கும்
போமென்ற வாயுமேல் மனதுயேறிபொரிகடந்து நெறிகடந்து போக்குந்தாண்டி
கூரென்ற வாரொடு குளப்பதமுந்தாண்டி கொடிதான முப்பாழின் போக்குந்தாண்டி
மாமென்ற மணித்தாயை சரணம்பணணி வைத்துப்பார் நாலுக்குள் மருவிப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

மனப்பெருமை மௌனயோகம்

153. மருவியே முந்திமுந்தி மூலம்நீதான் வாசிகொண்டு பாய்ச்சியதில் மாட்டிப்பாரு
உருவியே குறியின்மேல் கொண்டாயானால் உற்பான நாலைவிட்டால் எங்குமில்லை
அருவியே முன்பின்னும் கீழுமேலும் அழவென்னதழலென்ன மதிதானென்ன 
கருவியே கனங்கொள்ளாக் காட்சியாகும் கனங்கொள்ளாப் போதத்தைக் கண்டிடாயே

விளக்கவுரை :


154. கண்டிட்ட மனத்தாலே தவமுமாச்சு கவர்ந்ததுவுமுயிரதுவும் மனமேயாச்சு
மண்டிட்ட வாயுமேல் மனமுமாச்சு மகத்தான சஞ்சலத்தால் மனம்பேயாச்சு
அண்டிட்ட தீபம்போல் மனமேசென்று அண்டத்தில் சேர்ந்ததென்றால் அதுவேபோதம்
மண்டிட்ட மனம்விட்டால் ஞானம்போச்சு வாசியைத்தான் நழுவவிட்டால் யோகம்போச்சே

விளக்கவுரை :


155. யோகத்தை விடுகாதே மவுனமார்க்கம் உற்பனமாய்ப்புத்தியள்ளானென்றுச் சொல்லிக்
காகத்தை காலாங்கி ஐயனார்தாமும் கடாட்சித்துமுன்னேதான் பிராணயாமம்
மோகத்தை முதிர்ந்தபின்பு மொழிந்தசொற்கேளு முந்தினதோர் மூலத்திலகாரமீசன்
காகத்தை உகாரமது சத்தியாக்க தனித்திரண்டுங்கூடுவது மவுனமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar