போகர் சப்தகாண்டம் 141 - 145 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 141 - 145 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
141. ஏதென்று பிறக்காமல் அதற்குள்ளேநின்று இன்னமொருவரை யேறியிதுவே என்பான்
வாதென்று அதற்குள்ளே மயங்கியேங்கி மற்றுமொருவரையேறி யிதுதானென்பான்
தீதென்று மூன்றுவரை திறந்துயேறி சிறந்துநின்று உம்மனையிதுதானென்பான்
யாதென்று ரவிகோடி வன்னிகோடி பரிவானமதிகோடி பரிந்துபாரே

விளக்கவுரை :


142. பரிந்துபார் முதற்பாழில் பூதபூதம் புரியாதவன்தான் வாதியாவான்
எரிந்துபாரண்டன்பாழ்தேதிட்டாக்கா லெட்டெட்டு மறுபத்துநாலாஞ் சித்தன்
முரிந்துபார் மூணாம்பாழ் புக்கினாக்கால் மூச்சான வாதுபது பிரந்ததானம்
கரிந்துபார் நால்பரிஞ்ச போகுவிடங்கண்டால் எமனடுங்கிப்போவான் இடம்காட்டிடாமே

விளக்கவுரை :

[ads-post]

143. நாட்டியே நிராதாரம் தன்னில்சொக்கி நலமாகக் குழைந்துள்ளே புகுந்தாயானால்
நாடியே தானேற காமம்போச்சு சாஸ்திரத்தாலாய்ந்த பொருளும்போச்சு
சூட்டியேசுழுத்தியைப்போல் உறக்கமாச்சு தூங்குமாம் ஆகுமோ ஒன்றுங்காணார்
தாட்டியே சடம்போன சழுத்தியினில் புகுந்தால் தனித்தசிவன் போலாவாய்நீயுங்காணே

விளக்கவுரை :


144. காணவே பாடினதோர் கூத்தைப்பார்த்து கருத்துரைத்து பின்புதான்வாதம்பாரு
பானவே பாதரவா நோக்கிப்பாரு பாதந்தல்லாடியதோர் கூத்துங்காணும்
கானவே வாசியுட நட்பைக்கண்டால் நடனமாய் கூத்ததுவும் கண்முன் காணும்
தானவே நடனத்தின் கூத்துகண்டால் தடித்ததோர்சாவும் பொய்யாகிப்போமே

விளக்கவுரை :


145. போமென்று சொன்ன ஆறாதாரத்தில் போக்கான களத்தில் நிற்கும் அட்சரந்தான்
ஆமென்று சேர ஐம்பது அட்சரமேயாச்சு அப்பனே ஒன்றெங்கே காணோங்காணோம்
ஒன்றென்று ஒன்று உண்டாக்கால் அதுதான் மாயம் மாயம் என்றுணர
மாமென்று ஆசானை யடுத்துக்கேளு அதுவறிந்து சொன்னாக்கால் குருவேயாகும்

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar