போகர் சப்தகாண்டம் 191 - 195 of 7000 பாடல்கள்
191. ஓட்டியே மூலத்தால்
முத்திபெற்றார் உத்தமனே பாட்டனென்ற மூலநாயர்
நாட்டியே நந்தியல்லோ
உபதேசித்தார் நலமான மூலத்தில் நந்திநந்தி
ஏட்டிலே மூலத்தால்
முத்திபெற்றார் ஏத்தமாம் பாட்டரென்ற எட்டுபேரும்
மூட்டியே இதுகடந்த மூலமூலம்
மூலமென்று மூச்சுவிட்டுப் பேசொண்ணாதே
விளக்கவுரை :
192. பேசொண்ணா மூலத்தே
எல்லாம்தோன்றும் பொருளாகவிரிந்துநின்றுப் பிரபஞ்சமாகிப்
பேசொண்ணா போகமெல்லாம் அனுபோகித்து
பெரிதான மூலத்தே வந்துசேரும்
பேசொண்ணா வகசரத்தோ
உரப்பனமும் பயமும் போக்கொன்று வரத்தொன்று ரெண்டுஞ்சொல்வேன்
பேசொண்ணா வகாரமது
உற்பனத்தைப்பண்ணும் பிரிந்துகொள்ளும் உதரத்தாயையுமாமே
விளக்கவுரை :
[ads-post]
193. லயமான நிஷ்களமாம்
மகாரமொன்றில் நந்தியென்பார் அதன்பேரு அதுவேபோகம்
நயமான ஓங்காரம் அதிலேநின்று
ஓராறும் அறிவுயர்ந்து தாழ்ந்துதானும்
நியமான பனிரெண்டாய் நின்று
அடிநிலைத்துநின்ற எட்டினுட கனையைவாங்கி
மயமான காமப்பாலிரைத்து
இரைத்து மாண்டுபோம் கள்ளருடன் மருவிடாதே
விளக்கவுரை :
194. மருவுவதுதான் எதையென்றால் மூலத்தீயை மாட்டினால் வாசியுங் கைவிட்டேகும்
கருவதுவும் பேச்சாக
கருதிடாதே காமப்பேய் பிடித்தது போக்கேபூணு
வருவதுதான் மொத்து உள்ளே
பார்த்தானுற்ற கள்ளரைவருந்தான் ஓடிப்போவார்
முருவதுதான் முன்பிள்ளை
என்றாயானால் மூலத்தில் காணலாம் காலனில்லைதானே
விளக்கவுரை :
195. தானான காலனுண்டென்று
உலகோர்சொல்வார் தனிக்காலன் வேறில்லை மூலன்காலன்
ஆனான ஆலமுண்டார் அஞ்சே
செய்தார் அதைக்கண்டு பதஞ்சலியம் அன்புகூர்ந்தார்
கோனான பிரபஞ்சத்தில்
தில்லைக்குள்ளே கூப்பிட்டு ஆட்டுவித்துக் கூத்துகண்டார்
ஆனான கன்னியன்று
ஆலங்காட்டில் ஆட்டுவித்தாள் திருநடனஞ் சிவனைத்தானே
விளக்கவுரை :