போகர் சப்தகாண்டம் 186 - 190 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 186 - 190 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
186. தானான ரெண்டெழுத்தை பூட்டியேறச் சதிரான சிவயொகம் கையிற்சிக்கும்
ஆனான விசுத்தியிலே நின்றுகொண்டு அப்பனே நினைவாலே மூலம்பாரு
கூனான சுழிமுனையில் குழலாய்க்காணும் குறிப்பாக வாசிவைத்து காலையாட்டு
பானான பதிசென்று நந்திகண்டு பண்பான மதுவையுண்டு பரிந்துபாரே

விளக்கவுரை :


187. பரிந்துநின்று கண்டத்தைப் புருவமையம்பாரு பண்பானசுடர்போல பகுந்துகாணும்
குரிந்துநின்று குருபதத்தைத் துவாதசத்தைப்பாரு கூர்மையாய்ப் பதினொன்றில் கடந்துதோன்றும்
கரிந்துநின்று கண்டத்தில் நாகத்தைப்பாரு கலங்காமல் பிராணனுமே நிலைத்துக்காணும்
அரிந்துநின்ற அனாகதத்தை மாலோடுபிரமன் அடுத்துப்பார் வெட்டவெளி அல்லலாமே

விளக்கவுரை :

[ads-post]

188. அல்லலாம் தேகத்தை அறியவென்றால் அடுத்தேறி உன்மனையில் நின்றுபாரு
கல்லலாம் கீழ்நோக்கக் கண்டிப்பற்று கையினால் பிடித்த இடமொன்றுமில்லை
வல்லலாம் லட்சியங்கள் வழியாச்சு ஆனால்வாராது நித்திரையும் பசியுங்கேளு
புல்லலாம் பிறசத்தம் கேளாப்பக்கம் பிறந்திருந்து லட்சியத்தைப் பூட்டிமாட்டே

விளக்கவுரை :


189. பூட்டையிலே பிறசத்தம் கேட்டுதானால் புலங்களது முஷ்கரமாய் முறித்துப்போடும்
மாட்டையிலே மனதுசற்று நழுவிற்றானால் மடையனாய் கடித்த வெள்ளெலும்பாய்ப் போவாய்
தூட்டையிலே மனமலைக்கும் சூடொட்டாது சோதனையால் குறிகளெல்லாம் சுழற்றிப்போடும்
காட்டையிலே கைநெல்லிக்கனி போலாகும் கனமான வாசிவைத்துக் கருத்தைவூனே

விளக்கவுரை :


190. ஊனிப்போம் கப்பலுக்கு நங்கூரம் போட்டால் உறிகின்ற வாசியைநீ உரைத்துக்கட்டி
ஆனிப்போல் அசையாமல் மனத்தைமாட்டி படியோடே யழுக்காறு தளத்திலோட்டி
காணிப்போம் புலன்தன்னை நாட்டிநாட்டி கரிபரிக்குக் கடிவாளம் பூட்டிக்கட்டி
மூணிப்போ முனைபிடித்து குருபதத்தில் பிடிக்க முனிந்தநிராதாரத்தில் மூட்டியோடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar