போகர் சப்தகாண்டம் 181 - 185 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 181 - 185 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
181. ஆச்சென்ற இருபதுபேர் காமத்தாலே யனேகநாளிருந்துமே லிருந்துபோனார்
போச்சென்று அவர்பிடித்தார் பிராணயோகம் பேரானசிவகளை மூர்க்கத்தாலே
பேச்சென்ற வாணவம் பிறந்தால் பார்மேற் பேறுபெற அவர்போலே யாருக்காகும்
மூச்சென்று முந்திமுந்தி மூலயோகம் ஒளிவுகண்ட மட்டுமே நெஞ்சிற்பாரே

விளக்கவுரை :


182. பாரென்ற நெஞ்சில்நிற்கும் நடுமூலந்தான் பரிநேராய் பார்த்துமே பழக்கமாக்கி
பூரென்று வந்ததென்றார் புசுண்டமூர்த்தி யொருநெருப்பு பஞ்சுபட்டார் போலேயாகும்
போரென்ற பரத்தேறு போகரையய்யமாம் பின்குஞ்சு சிறகொடிந்து நாலும்போனால்
ஏரென்ற வினத்தோடே கூடாதாய் போவிளமையிலே மூலத்தைக் கூட்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

183. கூடாட்டால் அரிதரிது பிராணனென்றார் கூறியதோர் சொன்னமொழி கேட்டுப்பொங்கி
ஆடாட்டால் அடியற்ற மரம்போல் யானுமவர்பதத்தில் வீழ்ந்தெழுந்தேன் ஆண்மையாக
நாடாட்டால் ஐயரன்று யோகமூர்த்தி நம்போலே வாழ்ந்திரென்று யெடுத்தாரைய்யர்
மூடாட்டால் சொன்னதொரு மூலமாதி முதிர்ந்துநின்ற பிராணனைத்தான் அறிந்திடாயே

விளக்கவுரை :


184. அறிந்திட்ட ஐயரெங்கே இருப்பதென்றால் அதிகமாமேருவுக்கு தெற்கேயாகும்
முறிந்திட்ட வாதமுண்டு ஞானமுண்டு மூர்க்கமாம் யோகமுண்டு சித்தரெல்லாமுண்டு
பிறந்திட்ட பிராணனைத்தான் அறியப்பண்ணி பூரணந்தான் லயிக்கின்ற யோகங்காட்டி
உருந்திட்ட மாவாசல் உணர்வுகாட்டி உபதேசத்தண்மைதான் உரைத்திட்டாரே

விளக்கவுரை :


185. உரைத்திட்டு அழித்தலும் படைத்தலும் செய்தார் உரையான சிவலோக ஆண்மையாலே
வரைத்திட்டு அனுப்பியே விடைகொடுத்து மாசற்றமூர்த்தியே போய்வாவென்றார்
தரைத்திட்ட ஐயருமே சாகைக்குப்போனார் சாங்கமாய் பிள்ளைகட்குத் தன்மைசொல்லி
புரைத்திட்டு பிராணனைத்தான் அறியுங்களென்று போதித்தேன் பிள்ளைகட்கு புத்திதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar