போகர் சப்தகாண்டம் 211 - 215 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
211. தீபொளிதான் பளிச்சென்றால் பிரண்டையிலேவூது சிந்தித்தால் யோகமதுசித்தியாச்சு
சரவொளியாம் குமபகம் மூளைக்கேறாது கொடிதான வாயுவங்கே மவுனமாகும்
சரவொளிதான் சமைப்பதற்குத் தீயும் வேண்டாம் சமர்த்தான சிகாரத்தை யூதப்பற்றும்
சூழொளியாஞ் சுழித்தியங்கே நெடும்பாதையோடு சுளுக்காக இம்முறையை ஆடிப்பாரே

விளக்கவுரை :


212. ஆடியங்கே பார்ப்பதற்கு முறையைக்கேளு ஆடவெல்லாம் சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு
ஈடியங்கே இடகலையால் பூரித்துநின்று எழிலாக மூலத்தே நினைவாய்க்குமாயின்
நீடியங்கெ பின்கலையினுள்ளேரேசி நேர்ப்பாக நேர்ப்பாக யேத்திவாநீ
தூடியங்கே விரைத்தாக்கால் சுத்திநாடி திறமான வாதபித்தம் சிலேத்தமமும் போமே

விளக்கவுரை :

[ads-post]

213. திறமான மூன்றுவகை நோயும்வெந்து சித்தியாய்க் காயந்தான் இருக்கும்நன்றாய்
நலமான நல்வினையும் தீவினையும் தீரும் நலியான ஐம்புலனும் விரைந்துபோகும்
உறவான ஓங்கார நாதத்தாலே ஒருகோடி இடிபோலே ஓங்குமோங்கும்  
அறமானது இப்படியே அனைஞ்சுகண்டேன் அறிந்துமே நாங்கள் இப்படிதான்பாரே

விளக்கவுரை :


214. பாருநீ யவ்வென்றாலும் புக்கூடும் பரவிதோர் மகாரமதில் சேர்ந்து நின்றால்
ஊருநீ உகாரமாய் மேலேயேறும் இதுகாணும் பிரகாசம் என்றமார்க்கம்
நாருநீ பளிச்சென்றால் நந்தியாக நயமாக இதினோடே வாசிசேரு
ஆருநீ அட்சரமும் மகாரத்தோடு அனைந்ததோர் வாசிரெண்டு நாதவிந்தே

விளக்கவுரை :


215. நாதமென்றும் விந்துவென்றும் வாசிக்கபேரு ரவிமதியும் சிவசத்தி என்றுபேரு
வாதமென்றும் வசியமென்றும் அதுக்கேபேரு மனமென்றும் போதமென்றும் இதுக்கேபேரு
நீதமென்றம் பூமியென்றும் இதற்கேபேரு நிலையான வேகமென்றும் கந்தமென்றும் நேரு
காதமென்றும் தாரமென்றும் இதற்கேபேரு கண்ணொளியாய் நின்றது இரண்டும்தானே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 206 - 210 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

206. முதிர்ந்தவன் பத்தோரெழுத்தால் வேதமாச்சு முக்கியமாம் புராணமொடு சாஸ்திரங்களெல்லாம்
விதிர்ந்தபின் புயிதற்குள்ளே விரிந்ததுப்பா மிக்க சச்சிதானந்த வீரினாலே
நதிர்ந்தாறும் நதிகளெல்லாம் சமுத்திரத்தில் புக்கி நகர்ந்தார்போல் பூரணத்தில் லயிச்சிப்போகும்
ஒதிர்ந்துதே ஒன்றுமில்லை போக்கியதோர் நாளுமில்லை ஒளிதான்காணே

விளக்கவுரை :


207. ஒளியான வாசியைத்தான் உண்ணிக்கொண்டு உருண்டாலும் புரண்டாலும் உண்ணுமூலம்
அளியான ஆணியடித்தார்போலக்கூடும் அப்பவொரு விக்கினங்கள் அனுகிடாது 
குளியான முழங்கால்மேல் குதிகால்போட்டுக் கொடுஞ்சுழுக்கால் கோமுதாசனத்தில் கூட்டு
வெளியாக அணிந்தாக்கால் வலக்கால்மேலே விபரமாம் ஆசனத்தில் கூட்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

208. ஆசனத்தில் கூடையிலே வாசினைசுண்டி அத்துடைமேல் ரணடான் பதத்தைவைத்து
பாசனத்தில் பற்பாசனமாய்க்கட்டிப் பதிவாக நுனிமூக்கைப் பரிந்துபாரு   
வாசனத்தில் சுழிமுனையில் வாசிகூடும் மருகின்ற வாசினைத்தான் ஓடிப்பேரீகும்
ஏசனத்தில் இதுமார்க்கம் தாயைக்கண்டு இருக்கலாம் பூரணத்தில் எய்தலாலே   

விளக்கவுரை :


209. எய்தினால் சிவயோகி ஞானியாவான் அருகியே வாசியெல்லாம் முடங்கிச்சேரும்
அய்தினால் மூலத்தில் ஒளியேவிசும் ஆறுதலம் கிரந்தியெல்லாம் அற்றுப்போகும்
கொய்தினால் கும்பகத்தே மிதக்கலாகும் கொடிதான தணலே அசைக்கப்போவார்
மைதினால் வாய்வுவென்ன மசகமாச்சு மறந்தந்த சித்தரும் கண்டவாறே

விளக்கவுரை :


210. வாரான மூலத்தை யவ்வென்றூனு மருவியபின் முனைகொண்டால் வங்கென்றூனு
பாரான பளிச்சென்றால் சிங்கென்றூனு பற்றியே முன்னூறு வகைகாணும்காணு
மீரான மின்னினுட ஒளிபோல் காணும் மிரலாதே மனமுன்னே சாரமுண்ணு
ஆரான ஆலமுண்ட சிவன்முக்கண் போல் ஆங்கார தீபொளியை அழுந்திப்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 201 - 205 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
201. புருகுவார் நரகத்தில் மூலங்கண்டு புகுந்துமே தீயொளியில் கூடக்கூட்டி
கருகுவார் களையிருந்த பானுவீட்டில் கலங்காமல் கலந்துமந்த ஒளியுங்கண்டு
தகுறவே சந்திரனாற் விருந்தவீட்டில் தாமதமாய் இத்தணலை மேவப்பண்ணி
அகுறவே ஆபரணச் சோலைபோல அழுந்தவே உடல்குளிர்ந்து புளகமாமே

விளக்கவுரை :


202. ஆமென்ற சாம்பவிமுன் திரையைக்காட்டி ஐங்கோணக் குருபதத்தின் புகழைக்கண்டு
நாமென்ற நாதவிந்து ஈசன்சத்தி நற்கமலம் ஆயிரத்தெட்டு இதழின்மையம்
தாமென்ற ரவிகோடி மதிதான்கோடி சார்ந்துநின்ற மூலத்தில் சதமாங்கோடி
வேமென்ற அவ்வொளிக்கு நின்றுமேலே இருக்கிறதே தேவியென்ற பிரமன்தானே

விளக்கவுரை :

[ads-post]

203. பிரமமாம் பிரமமென்பார் போதமென்பார் பிரகாச சுத்தவெளி சாரவென்பார்
நிர்மலமாம் வேறொன்றிலாத நிற்குணந்தான் நிர்மலமாங்கடந்துநின்ற வேதாந்தமென்பார்
விபரமாம் பிரபஞ்சமெல்லாம் விளைந்ததென்பார் வெளியாக நிற்மயமாய் நிறைந்ததென்பார்
வர்மமாம் கடந்தவழி வெளிதானென்பார் வாய்ப்பேச்சே அல்லாமல் வரைகாணாரே

விளக்கவுரை :


204. கரைகாணா பூரணத்தின் ஒளியைச்சொல்ல மதியேது துதியேது தீய்தானேது
நிரைகாணா நிரஞ்சனமாம் எழிலைக்காண நிசமாகக் கேசரியால் நீட்டிப்பாரு
பரைகாணாப் புல்லருக்கு ஒன்றுமில்லை புத்தியள்ள சித்தருக்கு பொருள்தான்மேலே
உரைகாணார் மூலத்தே பார்த்து என்ன உறுதியில்லாது உண்ணியே உளறிப்போச்சே
ஆசனத்தில்அப்பியாசிக்கமுறை

விளக்கவுரை :


205. உண்ணவே யகாரமுதல் எண்பத்தொன்றும் உறுதியாம் பதினாறில் பிரிந்ததுப்பா
பண்ணவே யகாரமது ஈசனாச்சு பதிகடுக்கவார்த்தி கஞ்சத்தியாச்சு 
எண்ணவே இப்படி பதினாயிரமும் ஏத்தமாஞ் சிற்ற சத்தியாகநின்று
முண்ணவே இதனாலே முப்பத்தைந்தாச்சு மூவுலகோர் எழுத்தாக முதிர்ந்தவாறே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 196 - 200 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
196. சிவசத்தி வந்திதிலே தானாய் நின்று சேர்ந்துநின்ற இடபாகத்துரிய வீடு
அசைத்த பானமது நின்றுகொண்டு அதிகமலஞ்சலம் கருத்து அருந்தல் கேட்கும்
தவசித்தமானன் அதில்கூடிக்கொண்டு சாப்பிட்ட பதார்த்தமெல்லாம் சமனாய்ச் செய்யும்
துவதத்த நெஞ்சான சுழுத்தியுள்ளே துலங்கியதோரென வாசத்தி ஈசன்தானே

விளக்கவுரை :


197. ஈசனென்ற இடத்துள்ளே இதனைக்கேளு ஈராறு அதனுள்ளே காவலாச்சு
தாச்சென்ற பதினொருவர் கருவிகூட்டர் தனித்துநின்ற பிராணனங்கே நிற்கும்பாரு
கோச்சென்றும் கொலுவிருந்தார் பத்தியீசன் கொள்கின்ற சொர்ப்பனத்தின் வீட்டைக்கேளு
பாச்சென்ற பரத்தினிடம் வடிவுமாச்சு பாங்கான வுதரனங்கே பாரித்தானே

விளக்கவுரை :

[ads-post]

198. பாரித்துப் பதினாறு கருவிக்கூட்டம் பண்பாகக் கொலுவிருந்தார் பரமன்சத்தி
வீரித்து அவ்விடத்தே நின்றவரானார் விராடன் பதிலுறைந்தான் முன்பின் இரண்டுங்காணும்
ஏரித்து எட்டினுட கனையைவாங்கி படிசூரை விட்டுவிடம் ஏந்திப்பாரு
பூரித்து கடந்த வெள்ளம் புருவமையத்தே பேரானசாக்கிரமாம் தவமிதாச்சே

விளக்கவுரை :


199. ஆச்சென்று பதினாறு கருவிக்கூட்டம் மதிநின்றார் சதாசிவனும் மணித்தாயாகும்
வேச்சென்ற விபானனங்கே விரைந்துநின்றான் மேலானகொலுவாச்சு பிரபஞ்சமாச்சு
தேச்சென்ற கவியெங்கே தொண்ணூற்றாறு சுயம்பாக அதனுடைய தொழிலைச்செய்யு
மாச்சென்ற மறந்ததெல்லாம் தோற்றமாகும் மனங்குவிந்து பூரணத்தின் கொலுவிதாமே

விளக்கவுரை :


200. தாமென்ற கொலுக்கண்டு கருவிக்கூட்டம் தனித்தங்கே இந்திரியக் கூத்துகண்டு
மானென்ற மாயைபெண்ணாசை மகத்தான படுகுழியில் மாய்ந்து காண்பார்
ஆமென்ற வடிவெடுத்து அகங்காரங்கூட்டி அழும்பான மயக்கத்தால் அகமேலாக்கி
பாமென்ற பாவத்தை தலைமேற்கொண்டு பாங்கான வாசனையில் குறுகுவாரே

விளக்கவுரை :


Powered by Blogger.