201. புருகுவார் நரகத்தில் மூலங்கண்டு புகுந்துமே தீயொளியில் கூடக்கூட்டி
கருகுவார் களையிருந்த
பானுவீட்டில் கலங்காமல் கலந்துமந்த ஒளியுங்கண்டு
தகுறவே சந்திரனாற்
விருந்தவீட்டில் தாமதமாய் இத்தணலை மேவப்பண்ணி
அகுறவே ஆபரணச் சோலைபோல
அழுந்தவே உடல்குளிர்ந்து புளகமாமே
விளக்கவுரை :
202. ஆமென்ற சாம்பவிமுன்
திரையைக்காட்டி ஐங்கோணக் குருபதத்தின் புகழைக்கண்டு
நாமென்ற நாதவிந்து ஈசன்சத்தி
நற்கமலம் ஆயிரத்தெட்டு இதழின்மையம்
தாமென்ற ரவிகோடி மதிதான்கோடி
சார்ந்துநின்ற மூலத்தில் சதமாங்கோடி
வேமென்ற அவ்வொளிக்கு
நின்றுமேலே இருக்கிறதே தேவியென்ற பிரமன்தானே
விளக்கவுரை :
[ads-post]
203. பிரமமாம் பிரமமென்பார்
போதமென்பார் பிரகாச சுத்தவெளி சாரவென்பார்
நிர்மலமாம் வேறொன்றிலாத
நிற்குணந்தான் நிர்மலமாங்கடந்துநின்ற வேதாந்தமென்பார்
விபரமாம் பிரபஞ்சமெல்லாம்
விளைந்ததென்பார் வெளியாக நிற்மயமாய் நிறைந்ததென்பார்
வர்மமாம் கடந்தவழி
வெளிதானென்பார் வாய்ப்பேச்சே அல்லாமல் வரைகாணாரே
விளக்கவுரை :
204. கரைகாணா பூரணத்தின்
ஒளியைச்சொல்ல மதியேது துதியேது தீய்தானேது
நிரைகாணா நிரஞ்சனமாம்
எழிலைக்காண நிசமாகக் கேசரியால் நீட்டிப்பாரு
பரைகாணாப் புல்லருக்கு
ஒன்றுமில்லை புத்தியள்ள சித்தருக்கு பொருள்தான்மேலே
உரைகாணார் மூலத்தே பார்த்து
என்ன உறுதியில்லாது உண்ணியே உளறிப்போச்சே
ஆசனத்தில்அப்பியாசிக்கமுறை
விளக்கவுரை :
205. உண்ணவே யகாரமுதல்
எண்பத்தொன்றும் உறுதியாம் பதினாறில் பிரிந்ததுப்பா
பண்ணவே யகாரமது ஈசனாச்சு
பதிகடுக்கவார்த்தி கஞ்சத்தியாச்சு
எண்ணவே இப்படி பதினாயிரமும்
ஏத்தமாஞ் சிற்ற சத்தியாகநின்று
முண்ணவே இதனாலே
முப்பத்தைந்தாச்சு மூவுலகோர் எழுத்தாக முதிர்ந்தவாறே
விளக்கவுரை :