போகர் சப்தகாண்டம் 211 - 215 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 211 - 215 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
211. தீபொளிதான் பளிச்சென்றால் பிரண்டையிலேவூது சிந்தித்தால் யோகமதுசித்தியாச்சு
சரவொளியாம் குமபகம் மூளைக்கேறாது கொடிதான வாயுவங்கே மவுனமாகும்
சரவொளிதான் சமைப்பதற்குத் தீயும் வேண்டாம் சமர்த்தான சிகாரத்தை யூதப்பற்றும்
சூழொளியாஞ் சுழித்தியங்கே நெடும்பாதையோடு சுளுக்காக இம்முறையை ஆடிப்பாரே

விளக்கவுரை :


212. ஆடியங்கே பார்ப்பதற்கு முறையைக்கேளு ஆடவெல்லாம் சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு
ஈடியங்கே இடகலையால் பூரித்துநின்று எழிலாக மூலத்தே நினைவாய்க்குமாயின்
நீடியங்கெ பின்கலையினுள்ளேரேசி நேர்ப்பாக நேர்ப்பாக யேத்திவாநீ
தூடியங்கே விரைத்தாக்கால் சுத்திநாடி திறமான வாதபித்தம் சிலேத்தமமும் போமே

விளக்கவுரை :

[ads-post]

213. திறமான மூன்றுவகை நோயும்வெந்து சித்தியாய்க் காயந்தான் இருக்கும்நன்றாய்
நலமான நல்வினையும் தீவினையும் தீரும் நலியான ஐம்புலனும் விரைந்துபோகும்
உறவான ஓங்கார நாதத்தாலே ஒருகோடி இடிபோலே ஓங்குமோங்கும்  
அறமானது இப்படியே அனைஞ்சுகண்டேன் அறிந்துமே நாங்கள் இப்படிதான்பாரே

விளக்கவுரை :


214. பாருநீ யவ்வென்றாலும் புக்கூடும் பரவிதோர் மகாரமதில் சேர்ந்து நின்றால்
ஊருநீ உகாரமாய் மேலேயேறும் இதுகாணும் பிரகாசம் என்றமார்க்கம்
நாருநீ பளிச்சென்றால் நந்தியாக நயமாக இதினோடே வாசிசேரு
ஆருநீ அட்சரமும் மகாரத்தோடு அனைந்ததோர் வாசிரெண்டு நாதவிந்தே

விளக்கவுரை :


215. நாதமென்றும் விந்துவென்றும் வாசிக்கபேரு ரவிமதியும் சிவசத்தி என்றுபேரு
வாதமென்றும் வசியமென்றும் அதுக்கேபேரு மனமென்றும் போதமென்றும் இதுக்கேபேரு
நீதமென்றம் பூமியென்றும் இதற்கேபேரு நிலையான வேகமென்றும் கந்தமென்றும் நேரு
காதமென்றும் தாரமென்றும் இதற்கேபேரு கண்ணொளியாய் நின்றது இரண்டும்தானே

விளக்கவுரை :

போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar