போகர் சப்தகாண்டம் 216 - 220 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 216 - 220 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
216. இரண்டையும்தான் உற்றுப்பார்க்கப் பார்க்க நிறையற்று உறையற்று உணர்வுமற்று
அண்டையுந்தான் நல்லற்றுப் போனதெல்லாம் மடங்கிற்று உட்புகுந்த அந்தநாவில்
தண்டையுந்தான் சித்தொத்துத் தெளிவுமொத்து செயலற்ற நிஷ்களமாய்க் காணுங்காணும்
பண்டையுந்தான் பற்றற்றசிற்பரந்தான் பணிந்திடும் என்றுசொல்லி பகர்ந்திட்டானே

விளக்கவுரை :


217. பகர்ந்திட்ட வாசியது என்றபேச்சு பண்பாக வாய்க்கும்மெத்த எளிதோசொல்லு
திகர்ந்திட்டதேசிதான்ஞானதேசி சேர்நதிதைத்தான் மனமொத்து ஏறுவோர்க்கு
புகர்ந்திட்ட புருவத்தில் நின்று ஆடும் மனோன்மணியாம் பெண்ணைப்பாரு
இகர்ந்திட்ட காசிகங்கையமுனையூன்று மேகமாய்க் கண்டுந்தான் புருவமென்னே

விளக்கவுரை :

[ads-post]

218. என்னவே சிகாரமது நெருப்பாரம்மா  இசைந்துநின்ற வகாரமது மயிர்ப்பாலமாம்
உண்ணவே இரண்டும் விட்டால் ஒன்றாயொன்றில் சிகாரத்தையொளிக்காண்டு
மன்னவே யோகாரமும் தில்லசவுமுந்தும் வருந்தியே இதுநன்று கள்ளகன்று 
தன்னவே இரணடொளித்தான் சாந்தியாவான் தனித்திரண்டுமாறுக்குந் தள்ளநன்றே

விளக்கவுரை :

219. நன்றான சிகாரத்தில் கோபமெய்து நானென்ற ஆணவத்தால் ஆங்காரம் தாக்கும்
ஒன்றான ஈதிரண்டும் பெரியோரையா பிறப்பதற்கும் இறப்பதற்கும் பெரியவித்து
உண்டாட உகாரமது உடனேயாச்சு ஓங்கியதோர் சிகாரமது வரைந்தேபுக்கி
என்றான பிறப்பிறப்பும் இரண்டமாச்சு எழுத்திரண்டும் ஏத்தமாய் இருத்திப்பாரே

விளக்கவுரை :


220. இருத்தியே பாரென்று சொன்ன ஏத்தமாங் காலாங்கி ஐயர் தாமும்
பருந்தியே பக்குவம் பார்த்தெனக்குச் சொன்னார் பாரென்றார் வாசியைத்தான் பூரணத்தில்லயிக்க
மருந்தியே கண்ணிமைக்குள் வாயில்வந்து கலங்கும் மருவிரண்டும் பிறந்திறந்து வித்திதென்றார்
மறித்துமே மவுனத்தை விடாதேயென்றார் மகத்தான விதுரண்டால் பிறப்புமாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar