போகர் சப்தகாண்டம் 176 - 180 of 7000 பாடல்கள்
176. ஆடவேயவர் செய்தவகை
யேதென்னில் அய்யமாங் கும்பகந்தான் அறுபத்துநாலு
பூடவே பூரகந்தான்
முப்பத்திரண்டு புகையான ரேசகந்தான் பதினாறாகும்
ஆடவேயவரிருந்து பெற்றார்பேறு
அழகான கற்பகமரத்தின் மேலே
காடவே காகமென உருவைக்கொண்டு
கண்டிருந்தார் கோடியுகங் கரைகாணேனே
விளக்கவுரை :
177. கரைகாணாகோடி பிர்மாகண்டாரையா
கரையற்ற விஷ்ணுமயம் கோடிகண்டார்
தரைகாணா சங்காரங்கோடி
கண்டார் தாக்கோடே மஹேஸ்பரத்தைத் தாண்டிநின்று
துரைகாணாச் சதாசிவன்
தானொடுங்கிச்சத்தி துலையாத வாதமுடன் விந்துவற்று
திரைகாணா சிவன்சென்று
சிற்பரையிற் சேர்ந்து தெளிகடந்த பூரணத்தில் சொக்கினாரே
விளக்கவுரை :
[ads-post]
178. சொக்கியே புசுண்டருமே யவளைத்தொட்டு சுழுத்தியென்ற சினேந்திரன் தானுநின்றார்
பக்கியிந்திர ஜாலவித்தை
போட்டானாகில் பரிந்துமே ஷணப்பொழுதில் பணியும்வந்து
நிக்கிநிஜமென விரித்தாள்
யீடாரத்தை நிமிஷத்தில் அண்டமெல்லாம் மாய்ந்துபோச்சு
சுக்கியதை வேணுமென்றால்
உடைக்கவல்லாள் சுருதிக்கு வித்தான முத்தித்தாயே
விளக்கவுரை :
179. முத்தியிலே நின்றுமந்த
கண்டமூர்த்தி முன்போலே கற்பகமே ஆவாவென்றார்
பத்தியிலே யதுமேலே
கூடாரமென்றார் பார்க்கையிலே கூட்டோடே விருட்சமாச்சு
நித்தியிலே நின்றுரைத்த
சித்தைப்போலே நிலவரமாகக் கூட்டுக்குள் அமர்ந்துநின்றார்
கத்தியிலே நிற்கிறதோர் பூவைப்போல
கண்டத்தே நின்றுரைத்துக் கருதினாரே
விளக்கவுரை :
180. உரைத்துமே புசுண்டருட
பிறப்பைக்கேளு உகந்துமது நடனங்கள் களிக்கும்போது
பரிந்துமே பரிதிமுதற்
சோமனையுந் தரித்துப் பராபரமும் பார்வதியும் பார்த்தாரத்தை
நிரைத்துமே சிவகளையை
காமம்போல சேர்ந்தனைய யன்னமங்கே நிறைக்கெர்ப்பமாச்சு
இரைத்துமே இருபத்து
ஒன்றுபிள்ளை ஈசனுடகளையாலே புசுண்டராச்சே
விளக்கவுரை :