போகர் சப்தகாண்டம் 161 - 165 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 161 - 165 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
161. ஆச்சென்ற வெளியெனறால் இருடடு வெளியல்ல ஆதியாம் உன்மனைத்தாய் விளக்காய் நின்றாள்
ஓச்சென்ற ஒளியென்றால் ஒளியுமல்ல ஓகோகோ இருவர்தாம் ஒன்றில் நின்றார்
காச்சென்ற நிராதாரங்காணுங்காணும் கண்டுடனே மண்சூரி கலந்துபோகும்
வாச்சென்ற விளக்கொளியில் விட்டில்வீழ்ந்து மாண்டிடல் போல் மனஞ்சென்றுமருவர்தானே

விளக்கவுரை :


162. மருவினால் முத்திமுத்தி மைந்தாகேளு மற்றதெல்லாம் முத்தியல்லா மருவுமார்க்கம்
மருவினால் மனஞ்செயித்தால் போக்குயில்லை பூணாட்டால் பேய்க்கூத்தாம் பொல்லாமாய்கை
உருவினால் யோகத்துக்கிதுவே மார்க்கம் உண்மையாம் பார்த்தபடி உறுதிசொன்னேன்
இருவினால் இந்தமுறை யேத்துவாசி யேறாவிட்டால் யோகமெல்லாம் இழக்குந்தானே

விளக்கவுரை :

[ads-post]

163. தானான நாதவொளி நின்றுவொங்கா சமர்த்தான பூரணத்தே தளர்த்துநோக்கி
கானான மனமிந்த நிராதாரத்தை வாய்திறந்து சொல்லுதற்கு நாமமேது
பானான நிர்குணமே காணேன்காணேன் பாங்கான கரையில்லை பதியேகாணேன்
வானான மூலத்தைநின்று ஏறி எட்டியே நுற்பனத்தை கண்டிட்டேனே

விளக்கவுரை :


164. உற்பனமாம் பூரணத்தில் கரையேகாணேன் உயர்ந்துநின்ற சனகாதி நால்வர்காணா
நிற்பனமாம் மூலகுருதானுங்காணார் நிலைமையாஞ்சுரர் முதலாய் சித்தர்காணார்
நிற்பனமாம் நிட்களத்தின் கரையேசொல்ல நிலையான வேதாந்தம் விளம்பக்காணேன்
அற்பனமாம் மனமோடி யண்டிற்றாணால் ஆலித்தேலயித்துநின்று வழுத்தலாமே

விளக்கவுரை :


165. லயித்து நின்றுவழுத்துவது எவ்வாறென்னில் அன்னமிஞ்சவஸ்துவுண்ட ஆண்மைபோல
சுகித்து நின்றுசொக்குவது எவ்வாறென்னில் ஜோதியாம் அமிர்தமுண்ட தூய்மைபோல
குவித்து நின்றுவழுத்துவது எவ்வாறென்னில் கோரக்கர்கற்பமிஞ்சுங் கூர்மைபோல
இனித்துநின்ற இம்மூன்றும் ஒப்புமல்ல ஏத்தமாமா ஆனந்த போதைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar