போகர் சப்தகாண்டம் 166 - 170 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 166 - 170 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
166. தானெங்கே பார்ப்பதென்றால் மூலமாகும் தருகுரும்ப மிலேச்சருக்குங் காணுஞ்ஜோதி
ஆனங்கே ஆதாரத் தளமுங்காணும் ஆட்டான முப்பாழுங்கடந்து போகும் 
கோனெங்கே யமர்வாசற் குள்ளேபுக்கில் கோடிமதிகோடிரவி யெண்ணொண்ணாது
பூணங்கே பூரணத்தின் கரையேகாணோம் பூந்துடனே காந்தயம்போல் பொருந்தும்பாரே

விளக்கவுரை :


167. பொருந்துவது எவ்வாறுயென்று பேசில் பெருந்தீபமுடை திரிபோல் நெய்யுமாகும்
வருந்துவது வருணஜலம் ரவியுண்டாப்போல் மகாவஞ்சுவர்னண்ட படிகம்போல
தருந்துவது ஜலத்தடங்கும் குமுளிபோல சேத்தமவன் கூப்பிட்டுக் கேளாப்போல
ஒருந்துவதும் ஒடுங்குவதும் இதுவோமார்க்கம் உத்தமனே மகத்தோடு உன்னுவுன்னே

விளக்கவுரை :

[ads-post]

168. உன்னுதன்மை ஞானத்துக்கு ஆதாரமாச்சு உண்மையாஞ்சாந்தமல்லோ யோகச்சார்வு
மண்ணுவன்மை விவேகமென்ற வாழ்வுமாச்சு வாய்திறக்கா மவுனமொன்றே மனதுக்கின்பம்
நண்ணுவுண்மை ஞானத்துக்கோடும்வீதி நலிவில்லாத்திடமன்றோ மகத்துவவீரம்
புண்ணுவுண்மை பூரணமாம் பொறியைத்தள்ளு போக்கோடே மவுனத்தில் பூட்டிநில்லே  

விளக்கவுரை :


169. நில்லாமல் மடவார்பால் மாயத்தூடில் இருத்தலையாங்கொள்ளி மையத்து எரும்புபோலாவாய்
நல்லாமல் காமுகனாய்த் திரிந்திடாதே கடிதானபாழை தொடந்துதானால்
வல்லாமல் விழிகண்டு வலையிற்சிக்கி மற்றதுமே சமாதிவிட்டு கழண்டாயானால்
அல்லாமலொன்றுமில்லை நீயுங்கேட்டால் அதிஷ்டம் உனக்கில்லையென்று அறிந்துகொள்ளே

விளக்கவுரை :


170. கொள்ளென்ற யோகமார்தாம் பார்த்தாரென்றால் குணமான சூடாலையென்ற பிணந்தான்
வள்ளென்ற மூடாபிள்ளை ஜுவாலமூர்த்தி வண்டையாயிவருக்கு உபதேசித்தார்
புள்ளென்ற வாசியெல்லாம் போகொட்டாமற் போக்கோடே குண்டிலியிற் கருத்தைப்பூட்டி
வெள்ளென்ற வயசெல்லாம் விருத்தியாக்கி விளங்கிய அரசருக்கு அருள்செய்வானே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar