போகர் சப்தகாண்டம் 261 - 265 of 7000 பாடல்கள்
261. இழுக்கான மூலமுதலாறுந் தள்ளியேறிநின்று மேலற்றும் அடுத்துநோக்கி
உழுக்கான உன்மனையைத்
தாண்டியேறி உதிப்பான ஞானசத்திக்குள்ளே சென்று
மழுக்கான கேசரியாம் மனத்தாடி
அந்தத்தின் பராபரமாம் ஞானமூர்த்தி
யிழுக்கான காலமொடு
பிறப்பிறப்பும் போகும் பிடித்துவிட்ட சூடாலை போக்கராமாமே
விளக்கவுரை :
262. ஓங்கார மத்துநின்று
மண்ணையுண்ணு முருவியந்த மனஞ்சென்று தண்ணிருண்ணும்
தேங்காரம் தண்ணீர்தான்
தீமையுண்ணும் தீங்கான தீர்சென்று காலையுண்ணும்
காங்காரங் கால்சென்று
விண்ணையுண்ணும் கருத்தழிந்துமே சடலமென்றேயுண்ணும்
ஓங்காரம் வேதாந்தம் சித்தாந்தம்
போச்சு மேலேறி மதுவுண்டு விரைந்துபாரே
விளக்கவுரை :
[ads-post]
263. உண்டு ஓங்கார மூதலமுஞ்
செழுத்தோடாறும் உற்றுநின்ற மஞ்சகர்தான் இருக்குந்தானம்
அண்டு ஆங்காரமொடு ஆணவமுற்று
அதிஷ்டானம் நானென்றது அற்றுப்போனால்
பண்டுதான் அகாரமொடு
உகாரங்காணும் பாங்கான மகாரமொடு விந்துநாதம்
விண்டுவதின் மேல்நிற்கும்
பராபரத்தின் வெளியான மவுனத்தைப் பற்றியேறே
விளக்கவுரை :
264. யேறவே யகாரமது உகாரத்தைக் கொள்ளும் ஏத்தமாம் உகாரமது மகாரத்தைக்கொள்ளும்
மாறவே மகாரமது
விந்துவையுட்கொள்ளும் மகத்தான விந்துவது நாதத்தைக்கொள்ளும்
தாறவே நாதமது சத்தியைத்தான்
கொள்ளும் தன்த்துநின்ற சத்தியல்லோ சிவத்தைக் கொள்ளும்
சீறவே பரந்தன்னை
பரந்தான்கொள்ளும் சிவபதத்தைக் கொண்டவிடஞ் சேர்ந்துண்ணே
விளக்கவுரை :
265. சேர்ந்துநின்ற மூலமுதல்
ஆறும்பார்த்து சுழிமுனைதான் உருவிநின்ற தோற்றம்பார்த்து
சார்ந்துநின்ற மதிபோலே
சாம்பவியைக்கண்டு தாக்கிநின்று வளமுறைத்து தேர்ந்தபின்பு
பார்த்துநின்றது இவ்வளவும்
யோகமார்க்கம் பகலிறவு அற்றவிடம் ஞானமார்க்கம்
கார்ந்து கன்னிநின்ற இடம்
கண்டால் ஞானம்காட்டுவாள் கேசரியைக் கண்டுபாரே
விளக்கவுரை :