போகர் சப்தகாண்டம் 251 - 255 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 251 - 255 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

251. சார்ந்துமே நாலுமுறை பார்ப்பதற்கு முன்னே தனிபஞ்ச கிர்த்திபமெல்லாம் சாதித்தேறி
மார்ந்துமே மவுனமாம் சமாதிக்குள்ளே மாசற்ற சிவமான தெரிசனையைக்கண்டு
சார்ந்துமே தத்வல்ப சமாதிபார்த்து தனிப்பின்பு சஞ்சார சமாதிசென்று
சேர்ந்துமே நிருவிகற்ப சமாதியானால் சிறந்தபின் யாரூடச்சமாதியாமே

விளக்கவுரை :


252. ஆமென்ற வேதாந்தம் சித்தாந்தத்தோடே ஆண்மையாம் சமதாந்த மப்பியாசமார்க்கம்
ஊமென்ற நாதாந்த யோகமார்க்கம் உற்றுநின்ற போதாந்த ஞானமார்க்கம் 
வாமென்ற காலாங்கி வைக்குமார்க்கம் வகைமுறையாய் இதுவாறும் காணுங்காணும்
ஊமென்ற உடம்பெடுத்து விட்டகுறை வந்தால் உயர்ந்துநின்ற அகண்டமுன்னே யுண்ணுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

253. தானென்ற உண்ணுவது தவளைசற்பம் போலும் தனித்துநின்ற கெருடன்கைக் கோழிபோலும்
வேனென்ற வேங்கைகையாடுபோலும் விரவியதோர் மயிலின்வாய் சற்பம்போலும்
மானென்ற இடிவிழுந்த மலையைப்போலும் மகத்தான துஷ்டர்கையில் செந்துபோலும்
மானென்ற போதமுன்னைப் பாய்ந்திறைஞ்சி பருவமே தீயானால் பண்ணுந்தானே

விளக்கவுரை :


254. பண்ணவே தத்துவத்தை பரிந்துபாரு பாங்கான யோகத்தில் மாய்ந்துபாரு 
குண்ணவே மவுனத்தில் கூடிப்பாரு கேசரிதானேனென்றால் கூர்ந்துகேளு 
நண்ணவே ரவிமதியாம் வன்னிமூன்றும் நாடிநின்ற அதுவல்லோ கேசரிதான் மைந்தா
வண்ணவே ஆனந்த வேதாந்தம் பார்ப்பாய் அதிலொன்றும் கேசரியைப் பார்த்திலேனே

விளக்கவுரை :


255. ஆர்ந்துவது எவ்வாறு வேதாந்தமார்க்கம் அறிவான மூன்றெழுத்தினுட ரேசமுன்னே
நார்ந்த நாலெழுத்து இரண்டாம் தீட்சைப்பாரு நலம்பெறவே ஐந்தெழுத்து மூன்றாம்தீட்சை
போர்ந்துவது ஆறெழுத்து நாலாம் தீட்சை பேரான எட்டெழுத்து ஐந்தாம் தீட்சை
பார்ந்துமது பத்தெழுத்து ஆறாம் தீட்சை பதினைந்து அட்சரந்தான் ஏழுமாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar