போகர் சப்தகாண்டம் 246 - 250 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 246 - 250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

246. போச்சுதே பாழாச்சு முன்பின்னில்லை பெரும்பரியாந் திசைநாதங் காதில்கேட்கும்
ஆச்சுதே மதிகோடி வன்னிகோடி அடங்காத ரவிகோடி காந்தியாகும்
பாச்சுதே தினந்தோறும் பார்க்கக்கிட்டில் பண்பாக முழுகிப்போ மவுனப்பாம்புபோலே
தேச்சுதே சடத்துக்கு சிதைவுகாணும் சடந்தானும் சித்தியாய்த் திடமாய்ப்பண்ணே

விளக்கவுரை :


247. திடமாகப் பண்ணினால் சடம்போகாது சிதையாது மவுனத்தை திடமாய்நில்லு
மடமாக வுளத்தால் ஆவியைப்பாரு மனமொன்றில் கண்டத்தில் ஒளியேகாணும்
பிடிக்கப் பொய்யாம் பெரிதான கற்பூர தீபம் போல் நிற்கும்
சடமாகக் கண்ணினால் சாய்கையினாலாச்சு சச்சிதானமென்ற தேகமாமே

விளக்கவுரை :

[ads-post]

248. தேகமே மாறுதலை ஆறுகாலாய்ச் சித்திமுத்தி கண்டுநின்ற பானுவுக்குள்
மாகமே இப்படியே மதியைப்பார்த்தால் மகத்தான அமுர்தமென்ற தேகமாகும்
பூசுமே பொன்போலே வர்ணமாகும் பொருள்கடந்தும் அண்டத்தில் புக்கலாகும்
சோகமே சோம்பதுண்டு சட்டைத்தோலுரியும் மவுனத்தின் சூட்சந்தானே  

விளக்கவுரை :


249. தானென்ற சமாதியத்தான் முன்னேபார்த்து சாதித்து வம்பியாசம் பண்ணக்கேளு
ஊனென்ற ஓகாரமாம் உதாசனந்தான் தள்ளு உத்தமனே சிகாரமென்ற கோபம்போக்கு
வானென்ற வாயில் வந்தால் மனதுட்கொள்ளு மகத்தான துவைதமென்ற வாசினைதான் முந்தும்
தேனென்ற விதிரண்டுஞ் ஜெயிக்கமாட்டார் திறமாகத் தள்ளிவிட்டுச் சமாதிசேரே

விளக்கவுரை :

250. சேராக முந்தின தத்துவத்தைப்பாரு சேர்ந்தபின்பு ஏமமென்ற சயதயைத்தான்பாரு
பூராக கிரிகைசென்ற நேமத்தைப்பாரு பகழான ஓமென்ற பிராணயாமம்
பேராக உண்ணியபின் பிரத்தியாகாரம் பெரிதான தாரனையும் யோகமாச்சு
தாராக சமாதி ஐந்தும் ஞானமாச்சு சாதகமாய் இதனாலும் சார்ந்துபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar