256. ஏழோடு பதினாறு எட்டாம் தீட்சை ஏற்றமாம் சத்தியுட பிரசாதவித்தை
ஊழோடு ஒன்பதுதான் பின்புகேளு
உத்தமனே பரமான பிரசாதவித்தை
மாழோடு பத்தாச்சு
தீட்சைமார்க்கம் மருவியதோர் பதினொன்று மவுனதீட்சை
மூழோடு ஆடாது எட்டிச்சேரு
மூதண்ட மவுனத்தை மெல்ல அறிவில்சேரே
விளக்கவுரை :
257. சேருநீ குருசொன்ன
எழுத்தையொட்டி திறமான அறிவிலே அகண்டத்தைப் பாரு
ஆருநீ அண்டமது
உன்னைத்தூக்கும் அறிவிலே மனம் செல்ல நாதம்மாங்கு
மாருநீ மவுனத்தைச்
சொல்லாராசான் மகத்தான அகண்டத்தில் சொக்கிபுக்க
வாருநீ மந்திரம்பொய்
வாயைமூடு மாற்ற பதினோராம் தீட்சைதானே
விளக்கவுரை :
[ads-post]
258. தானென்ற குருபரந்தான்
தாமரைப்பூப்போல் சகஸ்திரத்தில் எட்டிதழாய்த் தயங்கிநிற்கும்
நானென்ற நடுவேதான் மட்டமாக
நலமான ஐங்கோணம் நிற்கும்பாரு
தேனென்ற நடுவேதான் சிவசத்தி
யொன்றாய்ச் செயலற்று உருவமற்று ஒளியாய்நிற்கும்
கானென்ற ரவிகோடி
காந்தியாகும் கண்கூசும் இந்தவொளி கண்கண்டாமே
விளக்கவுரை :
259. கண்டிட்டால் தத்துவங்கள்
சூழ்ந்துநிற்கும் கருத்தாக தத்துவத்தின் தெரிசனையைக்கண்டு
அண்டிட்டால் ஞானத்துக்கு
ஆதியிடம் அண்டமெல்லாம் போகுதடா உருவித்தாண்டி
வண்டிட்டால் ஞானமென்பார் வாய்பேச்சாலே
வந்துதென்று வித்தைசொல்லி வாதுங்காட்டி
கொண்டிட்டால் குறிகளை
காட்டமாட்டார் கொடிதான திருப்பாட்டு கூறுவாரே
விளக்கவுரை :
260. கூறுவார் குருபரத்தின்
தத்துவத்தைத் தாண்டி குறிப்பாக சிவனுட தெரிசனையைக்கேளு
தேறுவார் சீவகளை
கோடிரவிபோலச் சிறப்பாக நின்றுதடா திடமாய்ப்பாரு
ஆறுவார் சிவனென்ன
சிவமேயாச்சு அறையிறேன் அதில்நின்றான் உறையொட்டாது
ஊறுவார் உன்னியதில்
நின்றாயானால் உயரவல்லோ தூக்கியே விழுங்குந்தானே
விளக்கவுரை :