போகர் சப்தகாண்டம் 276 - 280 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

276. கேசரிதான் தாயானபதத்தின் காந்தி கீர்த்தி கண்கொள்ளாது விண்கொள்ளாது
ஆசரியென்பார் ரம்பாரம் தூளென்பார் அவளுக்குள் மவுனமுண்டு அறிவுன்னிப்பாரு
கேசரியின் மவுனத்தே நிஷ்களமாய் போவாய் கெடியான வம்பரத்தில் ஏதொவேதோ
தூசரியின்படி மைந்தா லட்சியத்தில் நேர்மை சொல்லரிது அப்பறத்தே சோதித்தானே

விளக்கவுரை :


277. தானென்ற மகாரவரை காதவோசை தாயான கன்னிக்குப் பீடமாகும்
மானென்ற பூரணம்பார் மவுனஞானம் மகத்தான நாதத்தோடு ஒன்றி ஒருமுனையாகும்
ஊனென்ற ஒருவழியாய் ஒன்றாயோடு உட்புகுந்தால் தோற்றுது அங்கொன்றுமில்லை
தூனென்ற சுத்தவெளி ரவிகோடி வன்னிகுழம்பாக மதிகோடி கண்டுகொள்ளாதே

விளக்கவுரை :

[ads-post]

278. கொள்ளாத மதிதமென்ற மகாரங்காணும் குறிப்பாக நகாரமல்லோ குருவைக்காட்டும்
வள்ளாத மகாரமன்றோ மடங்கி அந்தந்தாண்டி வழிகாட்டும் இடமல்லோ கேசரிதான்மைந்தா
மள்ளாத மகாரமென்ற மேலெழுத்தேயென்பார் மாட்டுவது மூன்றெழுத்துங் காணமாட்டார்
அள்ளாத மகாரமென்ன மவுனவித்தை வாய்திறவா மவுனமாமே

விளக்கவுரை :


279. வாமென்ற மவுனவித்தை மூன்றெழுத்துயென்பார் மாட்டுகிற இனங்காணார் மார்க்கங்காணார்
வாமென்ற மவுனவித்தை வாய்மூடயென்பார் மாடோடு குதிரையது வாய்ப்போக்கேது
கோமென்ற மவனவித்தை கேட்டிருப்பார் கூட்டுறவு காணார் கள்நாதங்கேளார்
ஆமென்ற மவுனவித்தை தாண்டி நாட்டி ஆதியாந் திசைநாதம் கேட்கும்காணே 

விளக்கவுரை :


280. காணேதான் மதியினுட அமுர்தஞ்சிந்தும் கலங்காமல் துவாதசங் கடந்துதோன்றும்
தானேதான் ஓசையறும் தன்னினைவும் போகும் தாரைபோல் அண்ணாக்கில் அமிர்தமொடு
மானேதான் மும்மலங்கள் அற்றுப்போகும் சகத்தான ஐம்பொறிகள் அடங்கிநிற்கும்
தேனேதான் மேலாமுதம் லகிறிமீறிச் சணமாகும் மூன்றுக்குமேல் ஜெயமுமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 271 - 275 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

271. கடுங்கான நற்பாலுண்ண ஞானசித்தி கடிதான யோகத்தில் அஞ்சாத
மடுங்கான பவுறுத்தில் அஞ்சுநாதம் அறைதானும் கடந்திடத்தே சுத்தநாதம்
நெடுங்கானல் ஈசத்தில் வாசிமுத்தி நேர்ப்பான மூலத்திடில் ஆவியேசத்தி
திடுங்கானல் சொலித்து நிற்கும் எந்நாளுந்தான் தூரமல்ல காதமல்ல கண்ணிமைக்குளாமே

விளக்கவுரை :


272. கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்துகாணும் கடிதான விண்ணேது வெளியெங்கேது
ஒண்ணிமைக்குள் ஒளியேது உரைத்தபடி இம்மூன்றும் உன்னதமாங்கே சரிதானுயர்த்தியாச்சு
நுண்ணிமைக்குள் கண்ணேது மூக்கங்கேது நுண்மையாம் கண்டிப்பு அழிந்துபோச்சு
உண்ணிமைக்குள் ஒன்றிரண்டு சமரசந்தானேது உற்றுப்பார் வெட்டவெளி ஒண்ணில்தானே

விளக்கவுரை :

[ads-post]

273. ஒண்ணிலே நின்றுரைத்துப் பழக்கமாகி உத்தமியாம் மனோன்மணியை புருவமையத்தோடே
உண்ணியே ஒளியோடே மவுனத்தையோட்டி ஊதியே சாம்பவியைக் கண்டுகொள்வாய்
நிண்ணியே இவ்வளவு யோகமார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு
குண்ணியே விந்துவென்ற குருபதத்தைக் கூட்டப்பா மவுனத்தைத் தாரையாமே

விளக்கவுரை :


274. தாரையாம் விந்திலே திரமதியோகோடி தளுக்கான கண்கூசி மயக்கமாகும்
ஓரையாம் நாதத்தில் செவிடுபட்டு ஊமையென்ற வெருத்தினுட உருவந்தோன்றும்
வாரையாம் அயசத்தியிலே வன்னியேடு மாசற்ற கோடிரவிமதியும் ஒவ்வா
சூரையாம் சோமப்பாலுண்டவருக்குக் காணும் சூதான ஞானிகட்கு மாயந்தானே

விளக்கவுரை :


275. மாயமாம் சிவத்துக்குள் மவுனம்சென்றால் மாசற்ற நவகோடி வன்னிரவு சோமன்
மாயமாம் பரத்தின்கீழ் முப்பாழுண்டு பார்க்கவே யகாரமொன்று உகாரமொன்று
மோயமாம் மகாரமொன்று முப்பாழாக முனைந்திந்து அதனொளியைச் சொல்லப்போகா
தூயமாம் ஒளியுடைய உன்மனத்தை தேவியுடபதமொன்றே கேசரிதான்காணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 266 - 270 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

266. கண்டுபார் வாசியுன்னி மேலேயேத்த கைவிட்ட மயக்கத்தை கீழேதள்வாள்
விண்டுபார் ஷணத்துக்குள் வெளியுங்காணும் விடுபடுவாள் அண்டண்ட மாலைபூண்டால்
அணடுபார் ஆதிவலையத்து அநாதிவலையத்து அதீதமாம் இரண்டுமொன்று அறிந்துகூடு
உண்டுபார் நிற்குணத்தில் அமிர்தமுண்ணில் உயர்ந்துநின்ற ஞானசித்தி உண்மைதானே

விளக்கவுரை :


267. உண்மையாம் வாசியென்று மவுனமொன்றும் உத்தமமாம் இரண்டுவித்தை உரைக்கக்கேளு
தண்மையாம் சாம்பவியும் கேசரியும் இரண்டும் தனித்தேசி ஏறுதற்கு காதிவித்தை
வண்மையாம் மனமென்றால் ஞானவித்தை மாசியென்ற மனமானால் இரண்டும் பொய்யாம்
ஆண்மையாம் அறிவந்தாண்டுபோகும் அதிதனின்ற வெளியல்லோ அகண்டம்பாரே

விளக்கவுரை :

[ads-post]

268. பாரென்ற தீயிற்குள் பராபரந்தான் இருந்தார் பண்பாக கண்டவரார் சித்தயோகி
ஏரென்ற உன்மனத்தாய் கேசரிக்குள் நிற்பாள் ஏறிப்பார் மவுனம்வைத்து ஊதுவூது
நீயென்ற நிர்குணந்தான் அதிலேகொள்ளு நிலையாரெ மவுனமொன்று வதியண்டு
கானென்ற நீராகாரம் ஒன்றுமில்லை கட்டுதரார் அறிவுகொண்டு கருதிக்காணே

விளக்கவுரை :


269. காணவே குண்டலியின் மூலமொன்று கண்டத்தில் பராபரமாம் மூலமொன்று
பூணவே புரயவமைய மூலமொன்று புகழான விந்துவிலே மூலமொன்று
தாணவே சத்தியிலே மூலமொன்று தனித்துநின்ற பராபரத்தின் மூலமொன்று
ஆணவே இதையாறும் கண்டோன் ஞானி அறிந்தணர்ந்தால் மும்மூலயோகியாமே

விளக்கவுரை :


270. யோகியாம் நகாரவரை யகாரவரை மட்டும் உறுதியாம் யோகத்தின் மூலமாச்சு
வாசியாம் அகாரம் முதல் உகாரந்தொட்டு அதிதமாம் மகாரம்வரை ஞானமூலம்
தேசியாம் திசைநாதம் மவுனத்தில் காணும் சேர்ந்தேற சேர்ந்தேற கண்டவீதி
ஊதியாம் காமப்பாலுண்டால் கேளிபோகம் சித்திக்கு அடுக்கா நற்பாலையுண்ணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 261 - 265 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

261. இழுக்கான மூலமுதலாறுந் தள்ளியேறிநின்று மேலற்றும் அடுத்துநோக்கி
உழுக்கான உன்மனையைத் தாண்டியேறி உதிப்பான ஞானசத்திக்குள்ளே சென்று
மழுக்கான கேசரியாம் மனத்தாடி அந்தத்தின் பராபரமாம் ஞானமூர்த்தி
யிழுக்கான காலமொடு பிறப்பிறப்பும் போகும் பிடித்துவிட்ட சூடாலை போக்கராமாமே

விளக்கவுரை :


262. ஓங்கார மத்துநின்று மண்ணையுண்ணு முருவியந்த மனஞ்சென்று தண்ணிருண்ணும்
தேங்காரம் தண்ணீர்தான் தீமையுண்ணும் தீங்கான தீர்சென்று காலையுண்ணும்
காங்காரங் கால்சென்று விண்ணையுண்ணும் கருத்தழிந்துமே சடலமென்றேயுண்ணும்
ஓங்காரம் வேதாந்தம் சித்தாந்தம் போச்சு மேலேறி மதுவுண்டு விரைந்துபாரே

விளக்கவுரை :

[ads-post]

263. உண்டு ஓங்கார மூதலமுஞ் செழுத்தோடாறும் உற்றுநின்ற மஞ்சகர்தான் இருக்குந்தானம்
அண்டு ஆங்காரமொடு ஆணவமுற்று அதிஷ்டானம் நானென்றது அற்றுப்போனால்
பண்டுதான் அகாரமொடு உகாரங்காணும் பாங்கான மகாரமொடு விந்துநாதம்
விண்டுவதின் மேல்நிற்கும் பராபரத்தின் வெளியான மவுனத்தைப் பற்றியேறே

விளக்கவுரை :


264. யேறவே யகாரமது உகாரத்தைக் கொள்ளும் ஏத்தமாம் உகாரமது மகாரத்தைக்கொள்ளும்
மாறவே மகாரமது விந்துவையுட்கொள்ளும் மகத்தான விந்துவது நாதத்தைக்கொள்ளும்
தாறவே நாதமது சத்தியைத்தான் கொள்ளும் தன்த்துநின்ற சத்தியல்லோ சிவத்தைக் கொள்ளும்
சீறவே பரந்தன்னை பரந்தான்கொள்ளும் சிவபதத்தைக் கொண்டவிடஞ் சேர்ந்துண்ணே

விளக்கவுரை :


265. சேர்ந்துநின்ற மூலமுதல் ஆறும்பார்த்து சுழிமுனைதான் உருவிநின்ற தோற்றம்பார்த்து
சார்ந்துநின்ற மதிபோலே சாம்பவியைக்கண்டு தாக்கிநின்று வளமுறைத்து தேர்ந்தபின்பு
பார்த்துநின்றது இவ்வளவும் யோகமார்க்கம் பகலிறவு அற்றவிடம் ஞானமார்க்கம்
கார்ந்து கன்னிநின்ற இடம் கண்டால் ஞானம்காட்டுவாள் கேசரியைக் கண்டுபாரே 

விளக்கவுரை :


Powered by Blogger.